TN government social media marketing training program
Entrepreneurship Development and innovation Instituteweb

’சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், வெப் டிசைனிங்’ குறித்து அரசு சார்பில் 2 நாள் கருத்தரங்கு! விவரம்!

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமானது சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் மற்றும் வெப் டிசைனிங் குறித்து இரண்டு நாள் கருத்தரங்கு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
Published on

நவீன காலத்தில் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் என்பது சிறிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடங்கி பெரிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வரைக்கும் கையில் எடுக்கும் பெரிய மார்க்கெட்டிங் தளமாக இருந்துவருகிறது.

அந்தவகையில் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் மற்றும் வெப் டிசைனிங் குறித்த விவரங்களோ, விழிப்புணர்வோ இல்லாதவர்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமானது இரண்டு நாட்கள் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்பதற்கான அடிப்படை தகுதியாக 18 வயது நிரம்பியர்கள் மற்றும் 10வது முடித்தவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN government social media marketing training program
இது மட்டும் நடந்தா... சம்பளம் வாங்கறவங்களுக்கு கொண்டாட்டம் தான்..!

இரண்டு நாள் கருத்தரங்கு.. எங்கு? எப்போது?

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் மற்றும் வெப் டிசைனிங் குறித்த இரண்டு நாள் வொர்க்‌ஷாப் ஆனது, 30.12.2024 மற்றும் 31.12.2024 தினங்களில் காலை 09.30 முதல் மாலை 5 மணி வரை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) அலுவலகத்தில் நடத்தப்படவிருக்கிறது.

டிரெய்னிங் முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தொழில்முனைவோர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 10-ம் வகுப்பு முடித்தவர்களாகவும் இருக்கவேண்டும். கருத்தரங்கில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்கிக்கொள்வதற்கும் குறைந்தவிலையில் ஏசி அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு www.editn.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. உதவி எண்களாக 8668102600, 7010143022 கொடுக்கப்பட்டுள்ளன.

TN government social media marketing training program
செல்போன்களின் அடிப்படையில் கட்டணம்? உபர் மற்றும் ஓலா ஆப்களில் மோசடியா? நிறுவனம் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com