INCOME TAX
INCOME TAXImage by Steve Buissinne from Pixabay

இது மட்டும் நடந்தா... சம்பளம் வாங்கறவங்களுக்கு கொண்டாட்டம் தான்..!

வருமான வரி குறைப்பு: மத்திய அரசின் புதிய பரிந்துரை
Published on

அடுத்தாண்டு தாக்கலாகவுள்ள பட்ஜெட்டில் 15 லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கான வருமான வரியை குறைக்க மத்திய அரசு பரீசிலித்து வருவதாக தகவ வெளியாகியிருக்கிறது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் மாதச் சம்பளக்காரர்கள் பெரிதும் பயப்படுவது வருமான வரிக்குத்தான். பொருட்களுக்கான GST, பெட்ரோல் , டீசலுக்கு கட்டும் கூடுதல் வரி, வீட்டு வரி, தண்ணீர் வரி, எல்லாம் போக, ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்தாக்கல் செய்யும் போது, அதில் NEW REGIME , OLD REGIME என இரண்டாகப் பிரித்து அதிலும் வரிப்பிடித்தம் செய்யப்படுகிறது.

OLD REGIMEல் இருப்பவர்கள் வீட்டு லோன், இன்சூரன்ஸ், போன்றவற்றைக் காண்பித்து வருமான வரியில் சலுகைகள் பெறலாம். NEW REGIMEல் இருப்பவர்களுக்கு ஆண்டு மொத்த வருமானத்திலேயே சலுகைகள் உண்டு. உதாரணமாக OLD REGIMEl 2.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றால், NEW REGIMEல் 3 லட்சம் வரை வருமான வரி கிடையாது. தற்போதைய சூழலில் பலர் புதிய வரி விதிப்பு முறையையே தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

OLD TAX REGIMEபடி 10 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெறுபவர்கள், தங்கள் சம்பளத்தில் 30% வருமான வரி கட்ட வேண்டும். அதே சமயம், NEW REGIMEல் 15 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெறுபவர்கள்தான் 30% வருமான வரி கட்ட வேண்டும். வரும் பட்ஜெட்டில் நியூ ரெஜிமில் இருப்பவர்களுக்கு மேலும் சில வரி விலக்கு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் மேலும் பலரும் NEW TAX REGIMEஐ தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், வரி விதிப்பிற்கு பயந்தாவது சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களை சேமிக்க வேண்டாம் செலவு செய்யுங்கள் என இத்தகைய நடவடிக்கைகள் சைக்காலஜிக்கலாக நிர்பந்திக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.

இது நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணம் அளிக்கவும், பொருளாதாரம் மந்தமடைந்துள்ள நிலையில் நுகர்வை அதிகரிக்கவும் உதவும் என மத்திய அரசு நம்புகிறது. ஒருவேளை இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் , மாதச் சம்பளம் வாங்குபவர்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com