whatsapp new update
whatsapp new updateX

இதைத்தான எதிர்ப்பார்த்தீங்க.. ஒரே WhatsApp-ல் மல்டி அக்கவுண்ட் பயன்படுத்தலாம்! அசத்தலான அப்டேட்!

ஒரே வாட்ஸ்அப்பில் மல்டி அக்கவுண்ட்களை பயன்படுத்தும் வகையில், ஸ்விட்ஜ் அக்கவுண்ட் முறையை வாட்ஸ்அப் அமல்படுத்தவிருக்கிறது.
Published on

வாட்ஸ்அப், டெலிகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் பல புதுவிதமான அப்டேட்களில் கலக்கிவரும் வாட்ஸ்அப் ஆனது, கூடுதலாக தங்களுடைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரே வாட்ஸ்அப்பில் "Multi-Account" என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ்அப் பயனாளர்களின் சின்ன சின்ன விருப்பங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் மெட்டா, கடைசியாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் செயலியில் ஸ்டோரி வைப்பதை போலவே, ஃபோட்டோவை அப்டேட் செய்து அதனுடன் பாடல்களை சேர்த்து ஸ்டேட்டஸ் வைக்கும் அப்டேட்டை அறிமுகம் செய்யும் செய்தியை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது மல்டி அக்கவுண்ட்களை ஒரே வாட்சப்பில் வைத்துக்கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தும் வேலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது

whatsapp new update
CHATGPTஐ பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் சீனாவின் AI.. கலக்கத்தில் அமெரிக்கா.. கலக்கும் DEEPSEEK!

வாட்ஸ்அப்பில் மல்டி அக்கவுண்ட் அப்டேட்..

பொதுவாக வாட்ஸ்அப்பில் இரண்டு அக்கவுண்ட்களுக்கு மேல் ஒரே வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியாது. சொந்தமாக ஒரு அக்கவுண்ட்டும், பிசினஸ்காக தனி அக்கவுண்ட்டும் என இருவேறு அக்கவுண்ட்களை வைத்திருப்பவர்கள் Dual அம்சத்தையே பெருமளவில் பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

இந்த சூழலில் ஃபேஸ்புக்கில் ஸ்விட்ஜ் அக்கவுண்ட் இருப்பதை போலவே, வாட்ஸ்அப்பிலும் ஸ்விட்ஜ் அக்கவுண்ட் முறையில் மல்டி அக்கவுண்ட் அம்சத்தை கொண்டுவரவிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

அதுகுறித்த WABetaInfo-ன் சமீபத்திய பதிவின் படி, வாட்ஸ்அப் ஆனது நிறைய அக்கவுண்ட்களை ஒரே டிவைஸில் பயன்படுத்தும் வகையில் மல்டி அக்கவுண்ட் அம்சத்தை கொண்டுவருவதில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதுமுதலில் ஐபோன் பயனாளர்களுக்கே கிடைக்கும் என்றும், பின்னர் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

whatsapp new update
ரூ.21,999 முதல்... 5G வசதியுடன் அறிமுகமான Poco X7, Poco X7 Pro! சிறப்பம்சங்கள் என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com