வியக்க வைக்கும் வானியல் அதிசயம்... நிழலின் மாறுபட்ட பாதைகள்; நிழலில்லா நாட்கள் வருவது ஏன்?

“சில தினங்களில் உங்களின் நிழல் பூமியில் விழாது. இது உங்களின் உள்ளூர் நேரப்படி சூரியன் உச்சிக்கு வரும்பொழுது காணலாம் இது அற்புதமான தினம்; மறந்துவிடாதீர்கள்”
சூரிய உதயம்
சூரிய உதயம்PT

நீங்க எப்பவாவது நம்ம நிழல கவனிச்சு இருக்கீங்களா? காலையில் சூரியன் உதிக்கும் போது ஒரு பக்கம்; மாலையில் ஒரு பக்கம்; சூரியன் உச்சியில் இருக்கும் போது வேறு பக்கம் என மாறி மாறி விழும். இதில் சூரியன் உச்சிக்கு வரும்போது நிழல் விழாமதானே இருக்கணும்? ஆனாலும் நம்மோட காலடியில் விழுவதற்கு காரணமென்ன? இதை முதலில் தெரிந்துக்கொள்ளலாம்.

விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்
விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

இது குறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் நம்மிடையே பேசியபொழுது, “நமது நிழல் நம் கூடதான் வரும். அதற்கு காரணம் சூரியன் தென்கிழக்கு, வடகிழக்கில் உதயமாவதுதான். ஆனால் இதில் வியப்பான ஒரு செய்தி என்னவென்றால், தென் தமிழ்நாட்டில் ஆண்டில் இரு தினங்கள் சில நிமிடங்கள், நிழல் கீழே விழாது. இதை ஆங்கிலத்தில் zero shadow என்று சொல்வார்கள்.

நிழலின் வேறுபாடு:

நீங்கள் ஒன்றை கவனிக்கவேண்டும். அதாவது காலையில் சூரியனானது அடிவானத்திலிருந்து மேலெழும்புகையில், உங்கள் நிழலானது மேற்கு பக்கமாக நீண்டு இருக்கும். அதே சூரியன் கொஞ்ச கொஞ்சமாக மேலழும்பி, உச்சிக்கு வரும் பொழுது உங்கள் நிழலானது உங்கள் காலடியில் இருக்கும். ஆனால் மறையாது. அதே சூரியன் மேற்கு பக்கம் கீழிறங்கும் போது நிழலானது கிழக்கு பக்கமாக நீண்டிருக்கும். இதை பற்றி பேசுவதற்கு முன்னாடி நாம் இந்திய நேரத்தை பார்க்கலாம்.

சூரிய உதயம்
விண்வெளியில் பறக்கும் இந்திய விமானி! விண்வெளி சுற்றுலா என்பது என்ன? விளக்குகிறார் முதுநிலை விஞ்ஞானி!

இந்திய நேரமானது எவ்வாறு கணக்கிடப்பட்டது?

அலகாபாத்தில் தெரியும் சூரியனின் கோணத்தை வைத்து நம் இந்திய நேரமானது கணக்கிடப்பட்டது. ஏனெனில் அலகாபாத்தில் சூரியனானது நண்பகல் 12 மணிக்கு செங்குத்தாக இருக்கும். இதனாலையே இதை அடிப்படையாகக் கொண்டு நேரமானது நிர்ணயிக்கப்பட்டது. இந்த நேரத்தின்படி இந்தியாவில் எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார்போல் நண்பகல் 12 மணிக்கு சூரியன் அனைவரின் தலைக்கு மேல் செங்குத்தாக வருவது கிடையாது. ஒவ்வொரு இடங்களிலும் மாறுபடும். சென்னையில் 12.07 என்றால் திருச்சியில் 12.17 க்கும் கோவையில் 12.20க்கும் சூரியனானது உச்சியை அடைந்திருக்கும்.

பெரும்பாலும் சூரியன் சரியாக கிழக்கில் நேர்கோட்டில் உதயமாவதில்லை, டிசம்பர் மாத சூரிய உதயமானது தென்கிழக்கில் தோன்றி , தென் உச்சிக்கு வந்து, தென்மேற்கில் மறையும். இது ஒவ்வொரு நாள் சிறிது சிறிதாக வடக்கு பக்கமாக நகர்ந்து வரும். இதை உத்ராயணம் என்பார்கள்.

ஜூன் 20ம் தேதி வரும்பொழுது உத்ராயணம் முடிந்து தட்சணாயனம் காலம் ஆரம்பிக்கும். அதாவது, வடக்கு பக்கமாக சிறிது சிறிதாக நகர்ந்த சூரியனானது ஒரு புள்ளியில் வடகிழக்கில் உதயமாகி, வட உச்சியை அடைந்து வடமேற்கு மறையும்.

சூரிய உதயம்
உக்கிரமா இருக்கப்போகும் சூரியன்!! தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஆக சூரியனின் உதயபுள்ளியானது வடகிழக்கிலிருந்து தென்கிழக்கிற்கும், தென் கிழக்கிலிருந்து வடகிழக்கிற்கும் மாறும்பொழுது இடையில் இரு நாட்களில் சம இரவு சம பகலைக் கொண்டிருக்கும். அதுதான் மார்ச் 21, மற்றும் செம்டம்பர் 23. இதை வசந்த சம இரவு பகல் என்றும் இலையுதிர் சம இரவு பகல் என்றும் கூறப்படுகிறது.

இந்த இரு தினங்களில் மட்டும்தான் நேர்கிழக்கில் சூரியன் உதயமாகும். இந்த சமயத்தில், அட்சரேகை பகுதியில் சூரியன் வரும்பொழுது வசந்த சம இரவு பகல் நாள் மார்ச் 21 இலையுதிர் சம இரவு பகல் நாள் செப்டம்பர் 23 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. சூரியன் அதிக பட்ச தென் கிழக்கில் உதிக்கும் நாள் டிசம்பர் 21-22 மற்றும், அதிக பட்ச வட கிழக்கில் உதிக்கும் நாள் ஜூன் 20.

இதில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து கிழக்கில் உச்சியை அடைந்து மேற்கில் மறையக்கூடிய நாட்களில் நமது நிழலானது பூமியில் விழாது. அதைதான் நிழலில்லா நாட்கள் ( zero shadow ) என்று கூறுவார்கள். நிழலில்லா நாட்களும் அதன் தேதிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அன்று நண்பகல் சில நொடிகள் பூமியில் நமது நிழல் விழாது.

கன்னியாகுமாரி 10 Apr & 1 sep

திருநெல்வேலி 12 Apr & 30 Aug

சிவகாசி 14 Apr & 28 Aug

மதுரை 15 Apr & 27 Aug

கொடைக்கானல் 16 Apr & 26 Aug

திருச்சி 17 Apr & 25 Aug

கோவை 18 Apr & 24 Aug

ஈரோடு 19 Apr & 23 Aug

சேலம் 20 Apr & 22 Aug

புதுவை 21 Apr & 21 Aug

ஓசூர் 23 Apr & 19 Aug

சென்னை 24 Apr & 18 Aug

மேற்கூறிய தினங்களில் உங்களின் நிழல் பூமியில் விழாது. இது உங்களின் உள்ளூர் நேரப்படி சூரியன் உச்சிக்கு வரும்பொழுது காணலாம் இது அற்புதமான தினம்; மறந்துவிடாதீர்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com