உக்கிரமா இருக்கப்போகும் சூரியன்!! தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு
இந்திய வானிலை ஆய்வு முகநூல்

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலமாக நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அலையும் வீசி வருவதால் பொதுமக்கள் அசவுகரியமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பு பெய்த பரவலான மழை காரணமாக இதமான சூழல் நிலவியது.

இந்நிலையில்,மீண்டும் நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 22ம் தேதி இன்றைய தினம் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது

இந்திய வானிலை ஆய்வு
மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை.. ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா (வடக்கு) மாவட்டங்கள், மத்திய பிரதேசம் (கிழக்கு), உத்தரப் பிரதேசம் (கிழக்கு), ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com