
“சூரியன் ஒரு விண்மீன் என்பது நமக்கெல்லாம் தெரியும். விண்மீன்கள் இரவில் ஒளிரக்கூடியவை. சிலவகை விண்மீன்கள் அதிக பிரகாசமாகவும், சிலவகை மங்கிய வெளிச்சத்தையும் கொண்டிருக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. இதில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன்தான் சூரியன்.
தகிக்கும் இந்த சூரியனின் வெப்ப ஆற்றல் எப்படி உற்பத்தியாகிறது என்பதை பார்க்கலாம்.
சூரியனில் லேசான கூறுகள் (soft elements) மற்றும் கடினமான கூறுகள் (hard elements) என்று இருவகை கூறுகள் உள்ளன. அப்படியிருக்க சூரியிலுள்ள ஒரு ஹைட்ரஜன், மற்றொரு ஹைட்ரஜனுடன் மோதிக்கொள்வது, சூரியனில் வெப்பசக்தியை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு இரு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் போது ஹீலியம் உற்பத்தியாகிறது. இப்போதைக்கு இந்த செயல் மட்டுமே சூரியனில் நடந்துக்கொண்டிருக்கிறது.
இத்தகைய நிகழ்வு சூரியனில் இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் நடந்துக்கொண்டிருக்கும். ஒருகட்டத்தில் சூரியனில் இருக்கும் ஹீலியம் உற்பத்தி நின்றவுடன் ஏற்கெனவே இருக்கும் ஹீலியம் ஒன்றுதிரண்டு கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற பல தனிமங்களை உற்பத்தியாக்கும். இறுதியில் சூரியனானது இரும்பையும் உற்பத்தி செய்யும். அத்தகைய இரும்பானது தனது அழுத்தத்தால் வெடித்து சிதறும்.
சூரியனின் ஹைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து வெடிப்பை ஏற்படுத்தும் செயலுக்கு nuclear fusion என்று பெயர். அதேசமயத்தில் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டின் செயல்பாட்டிற்கு nuclear fission என்று பெயர். இதில் ஒரு அணுவானது இரண்டாக பிளக்கப்படும் பொழுது அதிலிருந்தும் ஆற்றல் வெளிப்படும்.
சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல் 11 வருடத்திற்கு ஒருமுறை அதிக அளவு எனர்ஜியை வெளிப்படுத்துகிறது. இதைத்தான் சூரியப்புயல் என்று அழைக்கிறார்கள். சில சமயம் இந்த ஆற்றலானது குறைவாகவும், சில சமயம் அதிகமாகவும் சூரியனிடமிருந்து வெளிப்படுகிறது.
1859 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட சூரியப்புயல் பூமியின் காந்தசக்தியினைப் பாதித்தது. இச்சூரியப்புயலே பூமியினைத் தாக்கிய மிகப்பெரிய புவிக்காந்தப் புயல். இதனை ஹரிங்டன் நிகழ்வு என்கின்றனர். அச்சமயத்தில் டெலிகிராம் தொடர்புகள் பாதிக்கப்பட்டன.
இதுபோல் மீண்டும் சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றல் (சூரியப்புயல்) வெளிப்படும் நேரத்தில் தொலைதொடர்பு மற்றும் இண்டர்நெட் போன்றவை பாதிப்புக்குள்ளாகும். இப்படியான சூரியப்புயலை தெரிந்துக்கொள்ளவும், சூரிய ஆற்றலை ஆராய்ச்சி செய்யவும் அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் சாட்டிலைட் அனுப்பின, அனுப்பிவருகின்றன. அதில் ஒன்று தான் செப்டம்பர் 2ம் தேதி இஸ்ரோ அனுப்ப இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம்.
இந்த விண்கலமானது, சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் ஒரு புள்ளியில் (லெக்ராஞ் புள்ளி 1) நிரந்தரமாக நிலைநிறுத்தப்படும். இந்த விண்கலத்தின் வேலை சூரியனை உற்றுநோக்குவதுதான். சூரியனிடமிருந்து அதிக அளவு எனர்ஜி வெளியாவது தெரிந்தால் அதை ஆய்வகத்திற்கு தெரியப்படுத்துவதே இதன் நோக்கம்”