சூரிய குடும்பத்தில் ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதையைச் சுற்றி 5 சமநிலை பகுதிகள் இருக்கும். இவை சூரியனின் அதிகாமன ஈர்ப்பு விசை கொண்டதாக, சம்பந்தப்பட்ட கோளின் குறைந்தபட்ச ஈர்ப்பு விசையின் புள்ளிகளாக இருக்கும். இந்த சமநிலை புள்ளிகளில்தான், கிரகங்கள் சுற்றுப்பாதையில் சமநிலையில் நிற்கவும், விண்கலம் - பூமி - நிலவு - மற்ற கிரங்களை சீரான இடத்தில் நிற்கவும் வைத்துக் கொண்ள்கிறது. ஆகையால், இந்த சமநிலை புள்ளிகளில் இருந்து விண்வெளி தொடர்பாக எதையும் ஆய்வுசெய்தால், ஆந்த ஆராய்ச்சி எளிமையாக இருக்கும்
இந்த 5 சமநிலை புள்ளிகள், லெக்ராஞ்சியன் புள்ளிகள் என்று வரையறுக்கப்படுகின்றது. இந்த 5 புள்ளிகளில், லெக்ராஞ்ஜியன் பாய்ண்ட் 1 (LAGRANGE POINT) என்ற சுற்றுவட்ட பாதையில்தான் ஆதித்தியா எல் 1 விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது.
லெக்ராஞ்சியன் என்பது இத்தாலிய பிரெஞ்சு கணிதவியலாளர் ஜோசப் லுயிஸ் லாக்ராஞ்ச் (JOSEPH LOUIS LAGRANGE ) பெயரால் குறிக்கப்படுகிறது. லெக்ராஞ்சியன் புள்ளியில், சூரியன் மற்றும் பூமி ஆகியவற்றின் ஈர்ப்பு விசையானது சமமாக இருக்கும் என்பதால் அந்த இடத்தில் விண்கலம் நிறுத்தப்பட உள்ளது.
ஒரு சிறிய பொருளுடன் நகர்வதற்குத் தேவையான மையவிலக்கு விசை இந்தப் பகுதியில் கிடைப்பதால் விண்வெளியில் உள்ள இந்த புள்ளியை பயன்படுத்தி விண்கலத்தின் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.
இதையெல்லாம் கருத்தில்கொண்டே, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புள்ளிக்கு ஆதித்யா விண்கலத்தை இஸ்ரோ அனுப்புகிறது.
பூமியின் அருகாமை கிரகமான சூரியன், சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய நட்சத்திரம். 450 கோடி ஆண்டுகள் பழமையான கிரகமாக கருதப்படும் சூரியன், பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் புள்ளியை ஆதித்யா எல் 1 நான்கு மாதங்கள் பயணப்பட்டு சென்றடைய உள்ளது.
சூரியனில் மேற்பரப்பில் ஏற்படும் சூரிய புயல் வெப்ப மாறுபாடு, கதிர்வீச்சு, கரோனா விளைவு, காந்தப்புலத்தின் தன்மை போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக தனித்தனி கருவிகள் ஆதித்யா எல்ஒன் விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
நிலாவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, ‘உலகளவில் முதலில் சந்திரனின் தென் துருவத்தை அடைந்த நாடு’ என்ற பெருமையை பெற்றுள்ளது இந்தியா. இதனையடுத்து தற்போது சூரியனுக்கும் விண்கலத்தினை இந்தியா செலுத்த உள்ளது.
இத்தருணத்தில் இதற்கு முன்பாகவே மற்ற எந்த நாடுகளெல்லாம் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்கலன்கள் அனுப்பியுள்ளன என்ன என்பதை இங்கு காண்போம்.
1960-1969
அமெரிக்காவின் நாசா 6 Pioneer Missions அனுப்பியது (5,6A,7B,8C,9D,E). இதில் 5 வெற்றிகரமாக சென்றடைந்தது.1 மட்டும் தோல்வியடைந்தது.
1974 - 1997
Helios A (ஜெர்மனி - அமெரிக்கா, 1974- 1982)
Helios B (ஜெர்மனி - அமெரிக்கா, 1976-1985)
ISEE-3 (நாசா, 1978-1982)
ULYSSES (ESA-நாசா, 1994-95)
WIND (நாசா, 1994-2020)
SOHO (ESA-நாசா, 1996-2025 வரை தொடரும்)
ACE (நாசா, 1997 - 2024)
இவை அனைத்துமே வெற்றியடந்தது.
2000 முதல் - இன்று வரை
Ulysses (Second Pass, ESA-நாசா, 2000-2001)
Genesis (நாசா, 2001-2004)
STEREO A (நாசா, 2006 ல் அனுப்பபட்டது. செயல்படும் காலம் செப்டம்பர் 2021 வரை )
STEREO B (நாசா 2006-2018)
Ulysses- மூன்றாம் பாஸ், நாசா- ESA, 2007-2008 பகுதியளவு வெற்றியடந்தது)
DSCOVR (நாசா- பிப்ரவரி 2015 - வெற்றி)
பார்கர் சோலார் ப்ரோப் (நாசா - 2018 - டிசம்பர் 2025 வரை)
சோலார் ஆர்பிட்டர் (ESA பிப்ரவரி 10,2020)
CuSP ( நவம்பர் 16,2022 ல் அனுப்பப்பட்டது. ஆனால் அதனுடன் இப்போது வரை எந்த தொடர்பும் இல்லை)