சமூக வலைத்தளங்களுள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை முறியடித்து கடந்த சில நாட்களாக இளைஞர்களிடம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது, டிவிட்டர்.
அண்மையில் ஃபேஸ்புக் போன்று டிவிட்டரிலும் லைவ்வாக விடியோவை நேரலை செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது. இப்போது டிவிட்டரில் வெளியிடும் பதிவுக்கு பதில் அனுப்பும் வசதியில் காணப்பட்ட கட்டுப்பாடு ஒன்றைத் தளர்த்தியுள்ளது.
அதாவது, டிவீட்டுகளுக்கு பதில் போட்டால், பயனர் பெயரையும் சுட்டிக்காட்டுவது வழக்கம். அப்படி கமென்ட் செய்யும் போது 140 எழுத்துக்களை மட்டுமே சப்போர்ட் செய்யும். அதில் பயனர் பெயரும் அடங்கும். ஆனால் தற்போது இந்த வரையறை நீக்கப்பட்டு, பயனர் பெயர்களை (@username) கணக்கில் எடுக்காமல் கமென்ட் எழுத்துக்களை மட்டும் கணக்கெடுக்கும் வகையில், அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் டிவிட்டர் பயனர்கள் இனி அதிகளவு வார்த்தைகளைப் பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும். இந்த புதிய அப்டேட், மொபைலில் டிவிட்டர் கணக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்கும் உண்டு.