\
Touchscreen MacBook? Apple’s Next Big Upgrade Revealed
APPLE X - Greg Joswiak

லேப்டாப்பிலும் TOUCH SCREEN? Apple-ன் அடுத்த மெகா அப்டேட்! என்ன ஸ்பெஷல்?

MacBook Pro-ல் Touchscreen, OLED Display, M6 சிப் எனப் புதிய மாற்றங்களை Apple அறிமுகப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

Apple வெளியிட்டிருக்கும் ஒரே ஒரு டீசர், தொழில்நுட்ப உலகில் இப்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. . MacBook-ல் இதுவரை இல்லாத Touchscreen வசதி அறிமுகமாகலாம் என்ற தகவல், Apple பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Apple-ன் அடுத்த அறிவிப்பில் பல சர்ப்ரைஸ்கள் இருக்குமா?

Apple நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் Greg Joswiak, தனது X பக்கத்தில் Can't wait to Pro and tell next week என்று பதிவிட்டிருக்கிறார். இதனுடன் Apple லோகோ இடம்பெற்ற வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். இந்தப் பதிவைத் தொடர்ந்து, புதிய MacBook Pro தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

அக்டோபர் 28-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியைச் சுற்றி இப்போது பல தகவல்கள் வெளியாகின்றன.

MACBOOK
MACBOOK X - Constantin CotziaS

Apple என்றாலே புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், புதிய MacBook Pro, iMac, iPad mini எனப் பல சாதனங்களில் மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் MacBook Pro-ல் Touchscreen வசதி வரலாம் என்பது முக்கியமான எதிர்ப்பார்பாக உள்ளது. மற்ற நிறுவனங்களின் பல லேப்டாப்களில் இந்த வசதி ஏற்கெனவே இருக்கும் நிலையில், Apple மட்டும் இதுவரை MacBook-ல் தொடுதிரையை வழங்காமல் இருந்திருக்கிறது. MacBook-ஐப் பயன்படுத்துவதற்கு Trackpad மற்றும் Keyboard போதுமானது என்பதுதான் Apple-ன் அணுகுமுறையாக இருந்து வந்தது.

ஆனால், இப்போது OLED Touchscreen அறிமுகமாகலாம் என்ற தகவல் வெளியாகியிருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுயுள்ளது.

குறிப்பாக, வீடியோ எடிட்டிங், புகைப்பட எடிட்டிங், டிசைனிங் போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் திரையுடன் நேரடியாகச் செயல்படுவது கூடுதல் வசதியாக இருக்கலாம்.

Touchscreen MacBook? Apple’s Next Big Upgrade Revealed
விண்ணில் பாய்ந்த விண்கலம்.. ஜப்பானின் அடுத்த முயற்சி.. செவ்வாய் நிலவில் விஞ்ஞானிகள் தேடுவது என்ன?

இதனுடன் OLED Display-ம் புதிய MacBook Pro-ல் இடம்பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய திரையைவிட நிறங்களின் தெளிவு, கருப்பு நிறத்தின் ஆழம் போன்றவற்றில் OLED மேம்பட்ட அனுபவத்தைக் கொடுக்கும்.

iPhone-ல் இருக்கும் Dynamic Island போன்ற வசதியும் MacBook-க்கு அறிமுகமாகலாம் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதி iPhone-ல் இசை இயங்குவது, அழைப்புகள் உள்ளிட்ட நேரடி தகவல்களை உடனுக்குடன் காட்டும். இது புதிய MacBook-ல் இடம்பெற்றால், திரையின் மேற்பகுதியிலேயே முக்கியமான தகவல்களைக் காட்டும் வகையில் புதிய மாற்றம் அமையலாம்.

செயல்திறனைப் பொறுத்தவரை, புதிய M6 சிப் கொண்ட MacBook அறிமுகமாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய சிப் வந்தால், லேப்டாப்பின் வேகம் அதிகரிப்பதுடன், பேட்டரி சார்ஜி-ம் திறமையாகப் பயன்படுததபட வாய்ப்புள்ளது.

LAPTOP
LAPTOP GOOGLE - REUTERS

அதேபோல, iMac கணினியிலும் புதிய சிப் மற்றும் கூடுதல் வண்ணத் தேர்வுகள் அறிமுகமாகலாம். iPad mini-யைப் பொறுத்தவரை, இப்போது இருக்கும் LCD திரைக்குப் பதிலாக OLED திரையும், புதிய A20 Pro சிப்பும் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. OLED திரை வந்தால், படங்களையும் வீடியோக்களையும் இன்னும் தெளிவாகப் பார்க்கும் வசதி கிடைக்கும்.

இந்தப் புதிய சாதனங்களில் என்னென்ன வசதிகள் இடம்பெறுகின்றன, அவற்றின் விலை என்ன என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, MacBook-ல் Touchscreen வசதி அறிமுகமானால், பல ஆண்டுகளாக Apple பின்பற்றி வந்த வடிவமைப்பில் அது ஒரு முக்கியமான மாற்றமாக இருக்கும்.

Touchscreen MacBook? Apple’s Next Big Upgrade Revealed
இன்ப அதிர்ச்சி தந்த ஏர்டெல்! குறையும் ரீசார்ஜ் செலவு! பின்னணி என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com