\
Airtel has introduced voice only plans
AirtelReuters

இன்ப அதிர்ச்சி தந்த ஏர்டெல்! குறையும் ரீசார்ஜ் செலவு! பின்னணி என்ன?

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், இன்டர்நெட் வசதி தேவையில்லாத வாடிக்கையாளர்கள், வெறும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவையை மட்டும் பெறும் வகையில், புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அளவு கொண்ட திட்டங்களாக, அது இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

Airtel
AirtelReuter

இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக் கூடிய ஒரு திட்டத்தையாவது நிறுவனங்கள் வழங்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு மாதத்தில் 5-ஆம் தேதி ரீசார்ஜ் செய்தால், அடுத்த மாதமும் அதே தேதியில் ரீசார்ஜ் செய்யும் படி, அந்த திட்டம் அமைய வேண்டும் என்று, டிராய் விதிமுறைகள் வகுத்திருந்தது. இந்த மாற்றங்கள் அனைத்தும், வரும் அக்டோபர் 21-ஆம் தேதிக்குள், நடைமுறைக்கு வரவேண்டும் என்றும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மாற்றங்களால், இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பவர்கள், இன்டர்நெட் வசதியே தேவைப்படாதவர்கள், சாதாரண பட்டன் செல்போன் வைத்துள்ளவர்கள் பெறும் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த புதிய விதிமுறைகளால், பெரும்பாலான மக்களின் ரீசார்ஜ் கட்டணம் பாதியாக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விதிமுறைகளுக்கு, பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக, ஏர்டெல் நிறுவனம் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

வெறும் வாய்ஸ் கால்கள் மட்டும் இருக்கக் கூடிய, 185 ரூபாயிலும், 203 ரூபாயிலும், 206 ரூபாயிலும் 3 திட்டத்தை, ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. 185 ரூபாயை கொண்டு 28 நாட்களுக்கான வேலிடிட்டியும், 206 ரூபாயை கொண்டு ஒரு முழு மாதத்துக்கான வேலிடிட்டியும் பெற முடியும். ஏர்டெலை தொடர்ந்து, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய பிளான்களை அறிமுகம் செய்து வைக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Airtel has introduced voice only plans
Flipkart எடுக்கப்போகும் புது அவதாரம்! புதிய திட்டம் என்ன தெரியுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com