அறிவோம் அறிவியல் 2 | பால்வெளியில் என்னவெல்லாம் இருக்கும்? நட்சத்திரங்களுக்கு வயதானால் என்ன ஆகும்?

இரவில் வானத்தைப் பார்க்கும்பொழுது, நட்சத்திரங்கள் பல வண்ணங்களை கொண்டு காணப்படும். அதிலும் சில நட்சத்திரங்கள் அதிக பிரகாசத்துடனும் இன்னும் சில நட்சத்திரங்கள் ஒளி மங்கியும் காணப்படும். ஏன் இந்த வேறுபாடு? அறிவோம், இந்தப் பகுதியில்...
பால்வெளி
பால்வெளிபுதியதலைமுறை

இனி இந்த வார தொடருக்கு செல்வோம்...

நாம் இரவு நேரத்தில் நம் வீட்டு மொட்டை மாடியிலேயோ அல்லது வெட்டவெளியிலேயோ நின்றபடி வானத்தைப் பார்க்கும்பொழுது, நட்சத்திரங்கள் பல வண்ணங்களை கொண்டு காணப்படும். அதில் சில நட்சத்திரங்கள் அதிக பிரகாசத்துடனும் சில நட்சத்திரங்கள் ஒளி மங்கியும் காணப்படும். எப்படி ஒவ்வொரு நட்சத்திரமும் வேறுபட்டு காணப்படுகிறது? இதைப்பற்றி பார்க்கலாம்....

இதற்கு முன்னதாக பால்வெளியைப்பற்றி பார்க்கலாம்.

பால்வெளி:

பால்வீதி சுமர் 12.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இதன் அமைப்பு சுமார் 1,50,000 மற்றும் 2,00,000 ஒளியாண்டுகளுக்கு இடையே விட்டம் கொண்ட ஒரு சுழல் விண்மீன் திறள் ஆகும்.

பால் வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இதில் கோள்கள் என்று பார்த்தால், 100 முதல் 400 பில்லியன்கள் இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். பால்வீதியின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்றும் உள்ளது. இந்த கருந்துளையை நோக்கி 1.3 மில்லியன் மைல்கள் வேகமாக பால்வெளி விண்வெளியில் நகர்கிறது.

EVENT HORIZON TELESCOPE - Black holes
EVENT HORIZON TELESCOPE - Black holesTwitter

பால் வீதியில் வாயு மேகங்கள், தூசு மேகங்கள் மற்றும் நட்சத்திரக் கொத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இவற்றில்,

  • வாயு மேகங்கள் என்பது வாயு மற்றும் தூசியின் பெரிய கொத்துகள் ஆகும். இவற்றால் நட்சத்திரங்களை உருவாக்க முடியும்.

  • தூசி மேகங்கள் என்பது தொலைதூர பொருட்களைப் பற்றிய நமது பார்வையை மறைக்கக்கூடிய அளவிலான தூசியின் சிறிய தொகுப்புகள் ஆகும்.

  • நட்சத்திர கூட்டங்கள் என்பவை, ஒரே நேரத்தில் பிறந்த நட்சத்திரங்களின் குழுக்கள் ஆகும்.

நட்சத்திரங்களின் நிறங்கள் அதன் வயதை தெரிவிக்கும்

ஒரு நட்சத்திரம் உருவாகி அது அழியும் வரை தன் வாழ்நாட்களில் பல்வேறு அளவுகள், வண்ணங்கள் மேலும் பல்வேறு வெப்பநிலைகளை அது பெறும்.

பால்வெளி
சூரியன் போன்று 5 லட்சம் விண்மீன்கள்; ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பில் பதிவான பால்வெளி அண்டத்தின் அதிசயங்கள்

நட்சத்திரம் எப்படி ஒளிர்கின்றது?

சிறியது பெரியது என்று பல நட்சத்திரங்கள் பால்வெளியில் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் தனது மையத்தில் உள்ள அணுக்களில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களை கொண்டு இருக்கும். இவை இரண்டும் இணைந்து எரியும்பொழுது வெப்பம் உருவாகும்.

பால்வெளி
மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி - ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி க்ளிக் செய்த புகைப்படம்!

நட்சத்திரங்களில் உள்ள ஹீலியமும் ஹைட்ரஜனும் தீரும் வரை நட்சத்திரமானது தொடர்ந்து எரிந்துக்கொண்டே இருக்கும். அதன் எரியும் தன்மையைப்பொருத்து அதன் ஆற்றலையும் அதன் வயதினையும் கண்டுபிடிக்கலாம். நட்சத்திரத்தில் உள்ள எரிபொருள்கள் தீர்ந்ததும் அவை வெள்ளை குள்ளன்களாகவோ அல்லது சூப்பர் நோவாக்களாகவோ மாறும்.

நட்சத்திரங்களின் வயது

இளம் நட்சத்திரங்கள் பெரும்பாலும் கொத்து கொத்தாக உருவாகின்றன. இவை ஒரே வயதைக் கொண்டதாக இருக்கும். அதன்படி இளம் நட்சத்திரங்கள் பொதுவாக பழைய நட்சத்திரங்களை விட வேகமாக சுழல்கின்றன, எனவே ஒரு நட்சத்திரத்தின் சுழற்சி அதன் காந்த செயல்பாடுகளைக் கொண்டும் அதன் வயதை தெரிந்துக் கொள்ளலாம். நட்சத்திரங்களுக்கு வயதாகும்போது, ​​​​அவை மெதுவாக சுழலத்தொடங்கும். அப்பொழுது படிப்படியாக அதன் காந்த செயல்பாடானது குறைகிறது.

ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவான இளம் நட்சத்திரங்கள், நீலம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். ஏனெனில், அவை மிகவும் சூடாகவும், அதிக புற ஊதா கதிர்வீச்சை வெளியிடும். அதே நேரத்தில் குளிர்ந்த நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்தில் தோன்றி அதிக அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடும். இந்த நட்சத்திரங்களுக்கு வயதாகி குளிர்ச்சியடையும் போது, ​​அவை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாகவும், இறுதியில் சிவப்பு நிறமாகவும் மாறும். ஏனென்றால், ஒரு நட்சத்திரத்தின் மேற்பரப்பின் வெப்பநிலையானது வயதாகும்போது குறைகிறது.

தொடரும்....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com