\
UPI மூலம் பரிவர்த்தனை
UPI மூலம் பரிவர்த்தனைfb

UPI மூலம் ரூ.314 லட்சம் கோடி பரிவர்த்தனை.. வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சம்!

வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சமாக யுபிஐ மூலம் அதிகபட்சமாக 314 லட்ச ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

2025-26 நிதியாண்டில் இந்தியாவில் UPI மூலம் 314 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் நடைபெற்றது வரலாற்றிலேயே இல்லாத சாதனையாகும். கடந்த 5 ஆண்டுகளில் UPI பயன்பாடு வேகமாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிக்கையில் கூறியுள்ளார். NPCI தரவுப்படி 55.49 கோடிக்கும் மேற்பட்டோர் தற்போது UPI பயன்படுத்துகின்றனர்.

2025-26 நிதியாண்டில் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 314 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர்பங்கஜ் சவுத்ரி தாக்கல் செய்த அறிக்கையின் படி, இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனைகள் கடந்த 5ஆண்டுகளில் மிகவேகமாக அதிகரித்துள்ளன.

 upi payment
upi paymentweb

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தரவுகளின் படி, நாட்டில் தற்போது 55 புள்ளி 49 கோடிக்கும் அதிகமானோர் UPI-ஐ பயன்படுத்திவருகின்றனர் என்றும், உலகளவில் இந்தியாவின் UPI மற்றும் ரூபே (RuPay) கார்டு உள்கட்டமைப்பை சிங்கப்பூர், அமீரகம், இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட 12 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

UPI மூலம் பரிவர்த்தனை
வாட்ஸ்அப் User Name விவகாரம்.. மத்திய அரசுக்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!
UPI மூலம் பரிவர்த்தனை
நீங்கள் இல்லாமலேயே உங்கள் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்தலாம்..! அறிமுகமாகும் UPI Circle அம்சம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com