வாட்ஸ்அப் User Name விவகாரம்.. மத்திய அரசுக்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ள யூசர் நேம் அம்சம் குறித்து மத்திய அரசு எழுப்பிய சைபர் குற்றச்சாட்டு கவலைக்கு, மெட்டா நிறுவனம் பதில் அளித்துள்ளது. அம்சம் இன்னும் செயல்பாட்டில் இல்லை என்றும், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது; இதேபோன்ற அம்சம் கொண்ட டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ள யூசர் நேம் (USER NAME) அம்சம் தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸிற்கு, மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. யூசர் நேம் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு கவலை தெரிவித்த நிலையில், இந்த அம்சம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்றும், இதில் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மெட்டா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அதேநேரம், இதேபோல் யூசர் நேம் அம்சங்களைக் கொண்ட டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

