கூகுள் I/O 2025
கூகுள் I/O 2025 முகநூல்

கூகுள் I/O 2025 மாநாட்டில் அதிரடி அறிவிப்புகள்!

கூகுள் I/O 2025 மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. விரிவாக பார்க்கலாம்….
Published on

E. இந்து

கூகுளின் வருடாந்திர மாநாடான கூகுள் I/O 2025 நேற்று (மே 20) தொடங்கியது. மே 20 , 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல புதிய மென்பொருட்கள் வெளியிடப்படுகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் (மே 20) கூகுள் தரப்பில் I/O 2025 தொடர்பான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிவிப்புகள் பெரும்பாலும், செயற்கை நுண்ணறிவு தொடர்புடையதாக உள்ளது.

அந்த அறிவிப்புகளில் திரைப்பட தயாரிப்பு தொடர்பான புதிய செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் ப்ராஜெக்ட் ஸ்டார்லைன் புதுப்பிப்பு போன்றவைகளும் இடம்பெற்றுள்ளன.

கூகுள் தேடலுக்கான புதிய முறை:

கூகுளின் ஜெமினி ஏ.ஐ.யை பயன்படுத்தி இணையத்தில் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறும் அமெரிக்க பயனர்களுக்காக புதிய செயற்கை நுண்ணறிவை கூகுள் அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஏ.ஐ. மூலமாக ஆழமான தேடல், நிதி, விளையாட்டு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கப்படத்துடன் கூடிய விடைகள் நமக்கு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் பீம் –ஆக மாறிய ப்ராஜெக்ட் ஸ்டார்லைன்:

3டி வீடியோ அரட்டை மையமாக தொடங்கப்பட்டது தான் ப்ராஜெக்ட் ஸ்டார்லைன். இந்த செயல்முறை தற்போது “கூகுள் பீம்” ஆக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹெச்.பி. பிராண்ட் சாதனத்திற்குள் ஒளி புல காட்சி மற்றும் 6 கேமராக்கள் மூலம் வீடியோ அழைப்பில் உள்ள நபரின் 3டி படத்தை உருவாக்கும். இதனிடையே, டெலாய்ட், டியோலிங்கோ மற்றூம் சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே கூகுள் மீம் சாதனங்களை தங்கலது அலுவலகங்களில் சேர்ப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இமேஜின் மற்றும் வியோவில் புதிய மாற்றங்கள்:

கூகுளின் ஏ.ஐ. உரை பட ஜெனரேட்டரின் சமீபத்திய பதிப்பு இமேஜின் 4 ஆகும். இதன் மூலம் படங்களுக்கான உரையை சிறந்த முறையில் உருவாக்க முடியும். மேலும், சதுரம் மற்றூம் நிலபரப்பு போன்ற பல வடிவங்களில் படங்களை ஏற்றுமதி செய்யும் திறனை இமேஜின் வழங்குகிறது. இதன் அடுத்த தலைமுறை ஏ.ஐ. வீடியோ ஜெனரேட்டர்தான் வியோ 3 ஆகும். இந்த இரண்டு செயல்முறைகளிலும் குறிபிடத்தக்க மாற்றங்களை கூகுள் நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது.

கூகுள் அறிமுகப்படுத்தும் ஏ.ஐ. திரைப்படத் தயாரிப்பு செயலி:

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய செயற்கை நுண்ணறிவு திரைப்படத் தயாரிப்பு செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. சிறிய சிறிய வீடியோ இணைப்புகளை ஒன்றாக சேர்த்து நீண்ட செயற்கை நுண்ணறிவு வீடியோக்களை உருவாக்க இந்த ஏ.ஐ. திரைப்படத் தயாரிப்பு செயலி பயன்படும்.

ஜெமினி 2.5 ப்ரோ:

கூகுளின் சிறந்த தேடல் தளமாக தற்போது முன்னேறிவரும் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தளத்தை மேம்படுத்தி அடுத்தக்கட்டமாக ஜெமினி 2.5 ப்ரோ என்ற செயல்முறையை கூகுள் நிறுவனம் கொண்டுவரப்படுகிறது.

Project Aura எனும் புதிய ஸ்மார்ட் கண்ணாடி:

Xreal மற்றும் கூகுள் ஆகியவை இணைந்து Project Aura என்ற புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்குகின்றன. இந்த கண்ணாடிகளில் கலப்பு-ரியாலிட்டி சாதனங்களுக்கான ஆன்ட்ராய்ட் தளத்தை இந்நிறுவனங்கள் பயன்படுத்தி உள்ளன. இந்த கண்ணாடிகள் ஸ்மார்ட் போன்களை போல் செயல்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் க்ரோமில் “ஜெமினி”:

கூகுள் க்ரோமில் பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுகின்றனர். இத்துடன் கூகுள் ஏ.ஐ. ப்ரோ மற்றும் அல்ட்ரா சந்தாதாரர்கள் வலைப்பக்கங்களில் உள்ள தகவல்களை தெளிவுப்படுத்த அல்லது சுருக்க க்ரோமில் ஜெமினி பொத்தானை தேர்ந்தெடுக்கும் வகையில் புதிய அப்டேட் கொண்டுவரப்படுகிறது.

புதிய ஏ.ஐ. அல்ட்ராவிற்கு மாதம் $250:

கூகுளில் ஒரு புதிய “ஏஐ அல்ட்ரா” சந்தா வெளியாகிறது. இந்த “ஏஐ அல்ட்ரா” கூகுள் நிறுவனத்தின் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஏஐ மாதிரியாகும். இந்த புதிய ஏஐ அல்ட்ரா திட்டத்திற்கான மாதாந்திர விலையாக $250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூகுள் Search Live:

கூகுள் Search Live என்னும் புதிய செயல்முறை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இது செயற்கை நுண்ணறிவு உதவியாளரின் திறன்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இலவசமான ஜெமினி லைவ் திரைப்பகிர்வு:

ஜெமினி லைவின் திரைப்பகிர்வு அம்சத்தை அனைவரும் இலவசமாக பயன்படுத்தலாம். கடந்த மாதம் ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன் கைபேசி பயனர்களும் இதை இலவசமாக பயன்படுத்தலாம் என கூகுள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மீட்டில் ஏஐ பேச்சு மொழிப்பெயர்ப்பு:

கூகுள் மீட் தளத்தில் உங்களது பேச்சை உங்களுடன் இணைப்பில் உள்ள நபரின் விருப்பமான மொழியில் நிகழ்நேரத்தில் மொழிப்பெயர்க்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

ஜி-மெயிலில் புதிய அம்சம்:

மின்னஞ்சல்களில் உங்களுக்கு வரும் தகவல்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஸ்மார்ட்டாக பதில் அளிக்கும் புதிய அம்சம் கொண்டுவரப்படுகிறது. இந்த அம்சம் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பதில்களை கொண்டதாக இருக்கும். இது வருகிற ஜூலை மாதம் கூகுள் லேப்ஸ் மூலம் தொடங்கப்படும். மேலும் ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கைப்பேசிகளில் ஆங்கிலத்தில் கிடைக்கும்.

கூகுள் I/O 2025
கன்டென்ட் கிரியேட்டர்ஸ் (or) டிஜிட்டல் உளவாளிகள்? தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் சமூக ஊடக உளவாளிகள்!

ஏஐ ஷாப்பிங்கில் முன்னேறி வரும் கூகுள்:

செயற்கை நுண்ணறிவு மூலம் கூகுளில் ஷாப்பிங் செய்யும் முறை ஏற்கனவே முன்னேற்றப் பாதையில் சென்று வருகிறது. இதில் கூடுதல் அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளன. கூகுள் விரைவில் ஏஐ-யை பயன்படுத்தி விரைவாக ஷாப்பிங் செய்ய பயனர்களை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற பல அறிவிப்புகள் கூகுள் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com