ஒரே மாதத்தில் 1 மில்லியன் பேர் OUT! 2023-ல் அதிகளவில் ’UN INSTALLED’ செய்யப்பட்ட APP எது தெரியுமா?

2023ஆம் ஆண்டில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இளம் தலைமுறையினரால் அதிகளவில் விரும்பப்பட்ட அப்ளிகேசன் ஒன்று, தற்போது அதிகளவில் UNinstall செய்யப்பட்டுவருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Mobile Apps
Mobile AppsX

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான TRG டேட்டாசென்டர்ஸ், கடந்த 12 மாதங்களாக “Facebook, X/Twitter, Threads,Snapchat மற்றும் Instagram" முதலிய பிரபல மொபைல் ஆப்கள் குறித்த ஒரு ஆய்வில் ஈடுபட்டுவந்துள்ளது. அந்த ஆய்வின் படி ஒரு பிரபல அப்ளிகேசன் மாதத்திற்கு ஒரு மில்லியன் பயனர்களால் UNinstall செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அது பேஸ்புக், எக்ஸ், ஸ்னாப்சாட் அப்ளிகேசன் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

2023ல் இன்ஸ்டாகிராமை UNinstall செய்த ஒரு கோடி பேர்!

முதலில் இன்ஸ்டாகிராமானது Z ஜென்ரேஷன் எனப்படும் லேட் 90ஸ் - 2010ஸ் வரை பிறந்தவர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்தது. தொடர்ந்து நல்ல ப்ரோமோசன், அதிரடியான புதுப்பிப்புகள் என கவனம் ஈர்த்த இன்ஸ்டாகிராம் ஒட்டுமொத்த 2K கிட்ஸ்களையும் தன்வசம் ஈர்த்தது. ஆனால் தற்போது ஆண்டுகள் செல்லசெல்ல லேட் 90ஸ் மற்றும் 2K கிட்ஸ்களின் சோஷியல் மீடியா பயன்பாட்டின் விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகளாவிய பயனர்கள் தங்கள் கணக்குகளை நீக்க முற்படுவதால், Instagram சரிவை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

Mobile Apps
Mobile Apps

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான TRG டேட்டாசென்டர்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, 2023-ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 1 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் “எனது இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி நீக்குவது” எனத் தேடுவதாகவும், பயனர்கள் முன்னுரிமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

instagram
instagram

12 மாதங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடி (10,20,000 பேர்) பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளனர். இந்த பட்டியலில் ஸ்னாப்சாட் (1,28,500 பேர்), ட்விட்டர் (12,300 பேர்), டெலிகிராம் (71,700 பேர்), ஃபேஸ்புக் (49,000 பேர்), டிக்டாக் (24,900 பேர்), யூடியூப் (12,500 பேர்), வாட்ஸ்அப் (4,950 பேர்) மற்றும் வீசாட் (2,090 பேர்) என மற்ற பிரபலமான ஆப்கள் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.

எதனால் இந்த சரிவு?

சரிவிற்கான முதல் காரணமாக Z தலைமுறையின் விருப்ப மாற்றம் என்று கூறினாலும், முக்கிய காரணமாக அதிக விளம்பரங்களை பயன்படுத்துவோர் குறைவதே காரணமாக கூறப்படுகிறது. அதாவது இன்ஸ்டாகிராம் உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெருமைப்படுத்துகிறது என்றாலும், மேம்பட்ட வளர்ச்சி இல்லாமை, அதிக செலப்ரிட்டிகள் ஆக்டிவாக இல்லாதது மற்றும் பிராண்ட் விளம்பரங்களுக்காக தளத்தைப் பயன்படுத்தும் செல்வாக்கு செலுத்துபவர்கள் அதிகளவில் குறைவது போன்றவை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

Instagram
Instagram

ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் பயனர்கள் வெளியேறும் இந்தபோக்கு தொடர்ந்தால், அது பிற்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com