வீடியோ சாட் தளமான Omegle மூடல்.. இதுதான் காரணமா?

பிரபல வீடியோ சாட் தளமான Omegle மூடப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
omegle
omegletwitter

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின், உலக நாடுகள் பலவும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன. இதனால் வேலையிழப்புகள், நிறுவனங்கள் மூடல் ஆகியன தொடர்கதையாகின. தற்போதும் இதுபோன்ற சூழ்நிலை சில நாடுகளில் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், Omegle என்ற பிரபல வீடியோ சாட் தளம், தன்னுடைய நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. இதனால் புதுப்புது செயலிகள் களம் இறக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஸ்னாப்சாட் எனப் பல செயலிகள் வந்து செல்போன்களை ஆக்கிரமித்துள்ளன. அந்த வரிசையில், கடந்த சில ஆண்டுகளாக Omegle என்ற தளமும் பயன்பாட்டில் இருந்துவந்தது.

இதையும் படிக்க: “ஷாகிப் அல் ஹசன் மீது கற்கள் வீசக்கூடும்” மாத்யூஸின் சகோதரர் எச்சரிக்கை

இந்த செயலியானது, உலகின் மறுமுனையில் இருப்பவர்கள் வீடியோ சாட் மூலம் மற்றொருவர்களுடன் பேசுவதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் வரவேற்பைத் தொடர்ந்து பெரும் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் ஆகியவற்றின் மூலம் Omegle வீடியோக்கள் டிரெண்டானது மூலம் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் இளசுகள் முதல் பெருசுகள் வரை அதன்பக்கம் செல்லத் தொடங்கினர். இந்த நிலையில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பல தரப்பு மக்களுக்குப் பல விதமான சேவைகளை வழங்கிய Omegle தற்போது மூடப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் லீஃப் கே ப்ரூக்ஸ் (Leif K-Brooks) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த செய்தியும் அந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ”Omegle தளத்தை இயங்குதளத்தை நிர்வகிப்பதற்கும், மக்கள் அதனைத் தவறான முறையில் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராடுவதற்கும் செலவுகள் அதிகமாகிவிட்டதால், இதைச் சமாளிக்க முடியாத காரணத்தால் Omegleஐ தொடர்ந்து நிதிரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் இயக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது” என அதன் நிறுவனர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Omegle சேவை, தற்போது மூடப்பட்டிருப்பது பயனர்களைச் சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: கட்சியினரின் வார் ரூம் எப்படி செயல்படுகிறது? நேரடி விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com