மஹிந்திரா கம்பெனி ஓனரே பார்த்து வியந்த கார்..! அப்படி என்ன ஸ்பெஷல் இதில்?

மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலிகளை எளிதாக எடுத்து செல்லக்கூடிய கார் குறித்த வீடியோ ஒன்றை, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கார்
மாற்றுத்திறனாளிகளுக்கான கார்புதிய தலைமுறை

மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலிகளை எளிதாக எடுத்து செல்லக்கூடிய கார் குறித்த வீடியோ ஒன்றை, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த கார் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கார் உற்பத்தியில் எனக்கு ஆர்வம் அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திராபுதிய தலைமுறை

பொதுவாகவே சக்கர நாற்காலிகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் கார்களில் எளிதாக பயணிக்க முடியாது. இதனால் கார்களில் இருந்து கீழே இறங்கி குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பிறரது உதவிகளை அவர்கள் எதிர்பார்க்க நேரிடும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கார்
வீடியோ சாட் தளமான Omegle மூடல்.. இதுதான் காரணமா?

ஆனால் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள், பிறரின் உதவியின்றி சக்கர நாற்காலியை பயன்படுத்தி, வெளியிடங்களுக்கு எளிதாக செல்ல
முடியும். இவர் வெளியிட்ட இந்த வீடியோ பலரது மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வீடியோ, கீழே காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com