Jio offers for YouTube Premium
Jio offers for YouTube Premiumweb

அடேங்கப்பா.. இப்படி ஒரு ஆஃபரா? ஜியோவின் அசத்தல் அறிவிப்பு.. பொங்கலுக்கு வந்த குட் நியூஸ்!

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வெகு விமர்சையாக தொடங்கிய நிலையில், புது ஆஃபர் ஒன்றை களமிறக்கியுள்ளது ஜுயோ நிறுவனம்.
Published on

தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விலை உயர்வை அமல்படுத்தியது. அதன்படி, முன்பு மலிவு விலையில் கிடைத்த சில சலுகைகள் கைவிடப்பட்டன. பல பிளான்களின் விலை உயர்த்தப்பட்டன. ஏர்டலும் இதே உத்தியை கையாண்டது. இதனால் கடுப்பான பலரும், பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியதையும் பார்க்க முடிந்தது.

Airtel JIO BSNL Vodafone Idea
Airtel JIO BSNL Vodafone Ideatelecom operators

இப்படியாக, விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு பேரிடியாக வந்து சேர்ந்தாலும், அதை குறைக்கும் வகையில் புதுப்புது ஆஃபர்களை அவ்வப்போது கொடுத்து வருகிறது ஜியோ நிறுவனம்.

Jio offers for YouTube Premium
ரூ.21,999 முதல்... 5G வசதியுடன் அறிமுகமான Poco X7, Poco X7 Pro! சிறப்பம்சங்கள் என்னென்ன?

புதிய ஆஃபர் என்ன? விவரம்

இந்த நிலையில்தான், JioFiber, AirFiber பயனர்களுக்கு புது ஆஃபர் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ. அதன்படி, குறிப்பிட்ட சில திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள், 24 மாதங்களுக்கு யூடியூப் பிரீமியத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

திட்டங்கள் என்று பார்த்தால், Rs.888, Rs. 1,199, Rs. 1,499, Rs. 2,499, and Rs. 3,499 விலை அடங்கிய திட்டங்களை தேர்வு செய்பவர்களுக்கு யூடியூப் பிரிமியம் இலவசமாக கிடைக்கும். சாதாரணமாக யூடியூப் பிரிமியத்திற்கு சப்ஸ்கிரைப் செய்ய வேண்டுமானால், மாதத்திற்கு 149 ரூபாய் செலவாகும். இதன்மூலம், விளம்பரங்கள் இல்லாமல் யூடியூபை பயன்படுத்த முடியும். இப்படிப்பட்ட சலுகையைத்தான், JioFiber, AirFiber பயனர்களுக்கு இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளது ஜியோ நிறுவனம்.

பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த அறிவிப்பைப் பார்த்த பலரும், ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்குங்க என்றபடி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Jio offers for YouTube Premium
“தூங்கும்போது AI மூலம் 1000 வேலைகளுக்கு விண்ணப்பம்..” - ஏஐ மேஜிக்கால் கிடைத்த 50 ஜாக்பாட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com