INSAT 3DS | இஸ்ரோவின் அடுத்த செயற்கைக்கோள்... இன்னும் சில தினங்களில் விண்வெளியில் மற்றொரு மைல்கல்..!

இஸ்ரோவால் பெங்களூரில் வடிவமைக்கப்பட்ட INSAT 3DS செயற்கைகோளானது வரும் 17ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PLSV ராக்கெட்மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இதன் முக்கியத்துவம் என்ன என்பதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
INSAT 3DS
INSAT 3DS Twitter

இஸ்ரோவால் பெங்களூரில் வடிவமைக்கப்பட்ட இன்சாட்3டி செயற்கைகோளானது வரும் 17ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து PLSV ராக்கெட்மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

INSAT 3DS
அறிவியல் ஆச்சர்யங்கள் | நாம் கண்களால் காணும் கிரகங்களின் நிறங்கள் உண்மைதானா?

இன்சாட் 3டி - முக்கிய அம்சங்கள்

  • இன்சாட் செயற்கைக்கோள் என்பது இந்தியாவின் தொலைதொடர்பு, வானிலை, இவைகளை பற்றிய தேடல் மற்றும் மீட்பு தேவைகளை பூர்த்தி செய்ய இஸ்ரோவல் அனுப்பப்படும் ஒரு பல்நோக்கு புவி நிலை செயற்கைக்கோள்களின் தொடர் ஆகும்.

  • 1983 இல் தொடங்கப்பட்ட இன்சாட்3டி செயற்கைகோள் ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய உள்நாட்டு தகவல் தொடர்பு அமைப்பாகும்.

INSAT 3DS
INSAT 3DS
  • ஹாசன் மற்றும் கோபாலில் உள்ள மாஸ்டர் கண்ட்ரோலின் உதவியுடன் இந்த செயற்கைக்கோளானது கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.

  • இன்சாட் 3d செயற்கைகோளானது பூமியின் மேற்பரப்பை கண்காணித்து வருவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதன்படி கடல் சார் அவதானிப்புகள் மற்றும் தரவு பரவல் திறன்களை வழங்குகிறது.

  • இதில் இருக்கும் இரண்டு எஸ் பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், பிராட்காஸ்ட் சாட்டிலைட் செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறது.

இத்தகைய தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய இன்சாட் 3d வரிசையில் இப்பொழுது இன்சாட் 3d s என்ற செயற்கைகோள் வருகின்ற 17ம் தேதி சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்பட உள்ளது. இந்த 3d s மேற்கண்ட தகவல்களுடன் கொஞ்சம் கூடுதல் தொழில் நுட்பத்துடன் இயக்கப்பட உள்ளது.

insat 3ds உள்பகுதி
insat 3ds உள்பகுதி

வானிலை ஆராய்ச்சியில் இதன் பங்கு என்ன?

- வானிலை ஆராய்ச்சியில், பூமியின் தரைப்பகுதியிலிருந்து 70 கிலோமீட்டர் வரைக்கும் ஒவ்வொரு 40 அடியிலும் என்ன வெப்பநிலை இருக்கிறது என்பதை துல்லியமாக கணக்கிடும்

- பூமியிலிருந்து 15 கிலோமீட்டர் அளவு வரைக்கும் காற்றில் உள்ள ஈரப்பதம் எவ்வளவு என்பதை கணக்கிடும்

- ஓசான் படலத்தின் ஆய்வு போன்றவற்றை துல்லியமாக கணக்கிடும்

தொடர்ந்து ஆட்டோமேட்டிக் சிஸ்டத்தின் மூலம் அனைத்து செய்திகளையும் ஒருங்கே திரட்டி அதை தகவல்களாக நமக்கு அனுப்பும். இத்தகைய தகவல்கள் வானிலை ஆய்வு மையத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.

ஆகவே இனி வரும் காலத்தில், முன்கூட்டியே துல்லியமாக வானிலை, பருவநிலை மாற்றம் போன்றவற்றில் துல்லிய தகவல்களை தெரிந்துக்கொள்ள இயலும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com