விண்வெளியில் அடுத்த மைல்கல்... சூப்பர் நோவாவை கண்டுபிடித்த XPoSat; அசத்திய இஸ்ரோ!

இஸ்ரோ தனது எக்ஸ்போ சாட்-ஐ விண்வெளியில் நிலைநிறுத்திய ஐந்தே நாட்களில், அது சூப்பர் நோவா வெடிப்பு ஒன்றை கண்டுப்பிடித்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பி உள்ளது.
சூப்பர் நோவா
சூப்பர் நோவாFile image | Twitter

ஜனவரி 1ஆம் தேதி இஸ்ரோ PSLV-C58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இதன் முக்கிய நோக்கம் விண்வெளியில் உள்ள கருந்துளைகள் முதலியவற்றை எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் ஆராய்ச்சி செய்யும் எக்ஸ்போ சாட்-ஐ (XPoSat) விண்வெளியில் நிலை நிறுத்துவதுதான்.

PSLV-C58 பூமியிலிருந்து சுமார் 650 கிலோ மீட்டர் உயரத்தில் எக்ஸ்போ சாட்டை வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்திய பின்னர், PSLV-C58 ராக்கெட்டின் மூன்றாவது கட்ட ராக்கெட் பூமியிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தாழ்வட்ட பாதைக்கு கொண்டு வரப்பட்டது. அதில் ஆய்வுக்காக 10 கலன்கள் வைக்கப்பட்டன.

இதில் ஒரு கலத்தின் ஆய்வில் ‘விண்வெளியில் தண்ணீர் உருவாக்க முடியும்’ என்ற கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரோவின் அந்த வெற்றியைத் தொடர்ந்து, மற்றொரு வெற்றியையும் விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் நோவா
விண்வெளியில் தண்ணீர், எரிபொருள்... சாதனை படைத்த இஸ்ரோ குறித்து விஞ்ஞானி சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

அதாவது இஸ்ரோ, எக்ஸ்போ சாட்-ஐ விண்வெளியில் நிலைநிறுத்திய ஐந்து நாட்களில், அது சூப்பர் நோவா வெடிப்பு ஒன்றை கண்டுப்பிடித்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பி உள்ளது.

சூப்பர் நோவா
’சூப்பர் நோவா’ இதைபற்றி தெரியுமா? திருவாதிரை விண்மீன் சூப்பர் நோவாவாக மாறிவிட்டதா?

எக்ஸ்போ சாட்டில் இருக்கும் இரு எக்ஸ்-ரே கதிர்கள், பூமியிலிருந்து கிட்டத்தட்ட 11,000 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ள காஸோபியா A (Cassiopeia A) என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள விண்மீன் வெடிப்பு (சூப்பர் நோவா) ஒன்றை கண்டுபிடித்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சூப்பர் நோவா ஏற்படும்பொழுது அதிலிருந்து பல்வேறு தனிமங்கள் குறிப்பாக மெக்னீஷியம், சிலிகான், சல்ஃபர், கால்சியம், இரும்பு போன்றவை விண்மீன் கூட்டத்திலிருந்து வெளிபட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com