சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கடலில் தள்ளிவிட முடிவு.. எலான் மஸ்க் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தை பசுபிக் பெருங்கடலில் விழவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
nasa
nasax page

பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவடைய இருப்பதாகவும், அதன்பின்னர் விண்வெளியில் இருந்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

1998ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள், 2000ஆம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் வரும் ஆண்டுகளில் அதன் ஆயுட்காலம் நிறைவடையும் என்பதால், அதைச் செயலிழக்க வைத்து, அதை பசுபிக் பெருங்கடலில் விழவைக்க நாசா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: T20WC 2024 | உலகக்கோப்பையுடன் ஓய்வு... சத்தமின்றி 7 சாதனைகளைப் படைத்த ரோகித் சர்மா!

nasa
விண்வெளி நிலையத்தில் உருவான ‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியா' பற்றிய முழு விவரம்!

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்குக் கொண்டு வருவதற்காக பிரத்யேக விண்கலம் உருவாக்கப்படுகிறது. இந்த பணியை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது. இந்தப் பணிக்காக 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 4.5 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக்கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்pt web

இதுகுறித்து விஞ்ஞானிகள், ”சர்வதேச விண்வெளி நிலையமானது, நல்ல நிலையில் இருந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பான நடவடிக்கை எடுப்பது நல்ல செயல்முறைதான். ஏனென்றால், திடீரென பூமியின்மேல் விழுந்தால், மனிதர்கள் மீது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சாம்பியனான இந்தியா... மகிழ்ச்சியில் வீடியோகால் செய்த ஹர்திக்! வதந்திகளுக்கு முற்றிப்புள்ளியா?

nasa
விண்வெளி நிலையத்திற்கு மீன் குழம்பா? சமோசாவை எடுத்துச் செல்லாத சுனிதா வில்லியம்ஸ்.. நாசா சொன்னதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com