AI ஆசிரியர் ஐரிஸ்
AI ஆசிரியர் ஐரிஸ்முகநூல்

“வணக்கம்.. நான் ஐரிஸ்” - நாட்டின் முதல் AI ஆசிரியர் அறிமுகம்! எங்கே தெரியுமா?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவான ஆசிரியரை அறிமுகம் செய்துள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவான ஆசிரிரை அறிமுகம் செய்துள்ளது.

காலம் மாற மாற தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி என்பது அதிகரித்து கொண்டுதான் உள்ளது. அதிலும் சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது மனிதர்களின் வேலையையே பறித்து விடுமோ என்ற ஐயத்தினையும் ஏற்படுத்தும் அளவிற்கு விண்ணை முட்டும் வளர்ச்சியை கண்டு வருகிறது.

சினிமா துறை, பத்திரிக்கை துறை, தொழில் துறை போன்றவற்றில் எல்லாம் தடம் பதிக்க ஆரம்பித்துள்ள ஏஐ இப்பொழுது பள்ளிக்கூடத்தினையும் விட்டுவைக்கவில்லை. அண்மையில் கூட அமெரிக்காவில் 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை செயற்கை நுண்ணறிவு (AI) பேச உதவியுள்ளது. இந்நிலையில், இது மருத்துவ துறையில் மிக பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது. 

இது போன்ற பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பல வித்தயாசமான அதிசயங்களை படைத்துள்ளது. இப்படி, புது முயற்சியாக நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியரான ஐரிஸ் என்பவரை அறிமுகம் செய்துள்ளது கேரளா மாநிலம்.

முதல் AI ஆசிரியை ஐரிஸ்

கேரள மாநிலம் , திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள KTC மேல்நிலைப்பள்ளியில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். கேரளாவின் கல்வித்துறை வளர்ச்சியின் மற்றொரு அங்கமாக முதல் செயற்கை ஆசிரியர் ஐரிஸை அறிமுகம் செய்துள்ளனர்.

மேக்கர்லேஸ் எடுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது . AI ஆசிரியர் ஐரிஸ் மூன்று மொழிகளை பேசும் திறனையும், சிக்கலான கேள்விகளை சமாளிக்கும் திறையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்கிய தொழில்நுட்ப நிறுவனமானது தனது சமுக வலைதளத்தில் AI ஆசிரியர் பற்றிய ஒரு வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது. தற்போது இந்த காணொளியானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

AI ஆசிரியரான ஐரிஸின் தனிப்பட்ட குரல் உதவி, கையாளுதல் திறன்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுலபமாகக் கற்பித்தல் ஆகிய தனிபட்ட திறமைகளுடன் இந்த செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நகர்வை செயல்படுத்த சக்கரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

AI ஆசிரியர் ஐரிஸ்
பெண் நிரூபரிடம் அத்துமீறல்.. ரோபோவும் இப்படியா? என்னதான் நடக்குது இங்க!

இத்தனை திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்பமானது நிச்சயம் கல்வித்துறையில் மாற்றங்கள் பல நிகழ்த்தும் என்பதுதான் தற்போதையை எதிர்ப்பார்ப்பாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com