சோதனை முயற்சியில் வெற்றியடைந்த அக்னிகூல்... சாதித்து காட்டிய சென்னை ஐஐடி!

சென்னை ஐஐடி மாணவர்கள், 3d பிரிண்ட் தொழில்நுட்பத்தில் உருவான அக்னிகூல் என்ற ராக்கெட்டை நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
ஐஐடி சென்னை
ஐஐடி சென்னைபுதிய தலைமுறை

செய்தியாளர் - பாலவெற்றிவேல்

விண்வெளி துறைக்கான சிறந்த மாநிலம், தமிழ்நாடு.

தமிழ்நாடு விண்வெளி துறைக்கான சிறந்த மாநிலம். குலசேகரப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் விண்வெளி பூங்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ்நாடு அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது.

ஐஐடி சென்னை
குலசேகரப்பட்டினம் | வரப்போகிறது புதிய ராக்கெட் ஏவுதளம்... முக்கியத்துவம் பெறப்போகும் சிவகாசி!

தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பும் பெருகி உள்ளது. ஒரு ராக்கெட்டுக்கான அனைத்து பாகங்களும் தமிழ்நாட்டில் உதிரியாக கிடைக்கிறது. தற்போது சிவகாசியில் பட்டாசுக்காக தயாரிக்கப்படும் மூலப் பொருட்களைக் கொண்டு ராக்கெட் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே இதுதொடர்பான அனைத்து கட்டமைப்பும் இருக்கிறது.

அக்னிகூல்

இந்நிலையில், 3d பிரிண்ட் முறையில் தயாரிக்கப்பட்ட முதல் செமி பிரோஜினி இன்ஜின் ராக்கெட்டான அக்னிபான் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் இயங்கும் புத்தொழில் நிறுவனமான அக்னிகூல் நிறுவனத்தின் இளைஞர்கள் சிலர், இந்தியாவின் இந்த இரண்டாவது தனியார் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியவர்கள் என்கிற பெருமையை தற்போது பெற்றுள்ளனர்.

நவீன தொழில்நுட்ப யுகத்தில் செயற்கைக்கோள் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், ஒரு செயற்கைக்கோளினுடைய ஆயுள்காலம் 3 முதல் 5 ஆண்டுகள்தான். செயலிழக்கும் செயற்கைக்கோளுக்கு மாற்றாக மீண்டும் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக தொடர்ந்து ராக்கெட்கள் ஏவப்பட்டு வருகிறது.

அவ்வாறு வடிவமைக்கப்படும் ராக்கெட் இன்ஜின் உருவாக்கம் மட்டும் ஆறு மாதங்கள் வரை ஆகிறது. மொத்த ராக்கெட் வடிவமைப்பு மேற்கொண்டு அனைத்து விதமான தொழில்நுட்ப பாகங்கள் இணைக்கப்பட்டு செயலாற்றுவதற்கு ஒரு வருடம் வரை ஆகும் நிலையில், ராக்கெட் எஞ்சின் தயாரிப்பதற்கு 3d பிரிண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த அக்னிகூல் நிறுவனத்தினர்.

3டி பிரிண்ட் முறையின் முக்கியத்துவம்

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கிரையோஜனிக் இன்ஜின் தயாரிப்பிற்கான 3d பிரிண்ட் இயந்திரத்தை வடிவமைத்து வரும் நிலையில் கடந்த வருடம் 3d பிரிண்டிங் மூலம் முதல் கிரையோஜனிக் இன்ஜினை வடிவமைத்தார்கள். மார்ச் மாதம் 28ஆம் தேதி விண்ணில் ஏற்கனவே விண்ணில் பாய திட்டமிட்ட அக்னிகூல் ராக்கெட் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது.

இது போன்று மூன்று முறை ராக்கெட் ஏவும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் முன்தினம் (30ம் தேதி) காலை 7:15 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 525 கிலோவும் 6.2 மீட்டர் உயரமும் கொண்ட இந்த சிறிய வகை ராக்கெட், பரிசோதனை முயற்சியாக அனுப்பப்படுகிறது.

இந்த ராக்கெட், 3டி பிரிண்டிங் வடிவமைப்பில் செமி பிரயோஜனில் லிக்யூட் இன்ஜின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

30 கிலோ முதல் 300 கிலோ வரை செயற்கைக்கோள்களை வைக்கும் அளவிற்கு ராக்கெட் வடிவமைப்பை மாற்ற முடியும்
அக்னிகூல் நிறுவனம்

அக்னிகூல் ஏவப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், “ ‘அக்னிபான் - SOrTeD’ ஐ வெற்றிகரமாக ஏவியதற்காக இஸ்ரோ அக்னிகூல் காஸ்மோஸ் நிறுவனத்தை வாழ்த்துகிறோம். 3டி பிரிண்டட் செமி கிரையோஜெனிக் எஞ்சின் வடிவமைப்பு, விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்றவை உள்நாட்டு வடிவமைப்பு புதுமையவர்களின் திறமையை நிரூபிக்கிறது” என தெரிவித்துள்ளார். மேலும் விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிகரிக்க இந்த ராக்கெட்டின் வெற்றி உந்துதலாக இருக்கும் என சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்த செமி பிரயோஜனில் ராக்கெட் இன்ஜின் மூலம் உருவாக்கப்பட்ட ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனுஷ் எனும் ஏவுதலத்தில் இருந்து புறப்பட்டது.

அக்னிகூல் நிறுவனம் தெரிவிக்கையில், “இதை 3d பிரிண்ட் பிரிண்டிங் இயந்திரம் மூலம் 72 மணி நேரத்தில் உருவாக்க முடியும். இதன் மூலமாக அடுத்த சில ஆண்டுகளில் புவி தாழ் செயற்கைக்கோள்களை எளிமையாக அனுப்புவதற்கான ராக்கெட் உருவாக்கும் மற்றும் வடிவமைப்பு மிக எளிமையாக மேற்கொள்ள முடியும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் “ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அக்னிகூல் நிறுவனத்திற்கான சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கான அனுமதியை இஸ்ரோ கொடுத்து இருக்கிறது. இதன் மூலம் ராக்கெட் இயக்கம் குறித்தான அடுத்தகட்ட ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட உள்ளோம்” என்றுள்ளது.

ஐஐடி சென்னை
விண்வெளியை சுத்திக்காட்ட போறேன்; நிலாவில் வீடு கட்டப்போறேன்! ஸ்பேஸ் ஸ்டேஷன்,ஸ்பேஸ் டிராவல்-ஓர் அலசல்

இதற்கிடையே அக்னிபான் ராக்கெட் ஏவப்பட்டது ஒட்டு மொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தும் சாதனை என பிரதமர் மோடி தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் சிங்கிள் பீஸ் 3டி பிரிண்டட் செமி கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் இயக்கப்படும் அக்னிபான் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்தியாவின் விண்வெளித் துறைக்கு ஒரு முக்கியமானதாகும் என கூறியுள்ள பிரதமர், நமது நாட்டின் இளைஞர் சக்தியின் குறிப்பிடத்தக்க புத்திசாலித்தனத்திற்கு சான்றாகும் என கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஹைதராபாத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்கை ரூட் நிறுவனத்தின் சார்பில் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் எஸ் விண்ணில் அனுப்பப்பட்ட நிலையில் அதற்கு பிறகு இரண்டாவது தனியார் ராக்கெட் என்கிற பெருமையை அக்னிபான் தனுஷ் பெற்றுள்ளது.

ஐஐடி சென்னை
அறிவோம் அறிவியல் 1 | பிரபஞ்சம், கேலக்ஸி, சூப்பர் நோவா உருவானது எப்படி? சுவாரஸ்ய தகவல்கள்...!

விரைவில் 300 முதல் 700 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவ போகும் செயற்கைக்கோளோடு அக்னிப்பான் ராக்கெட்டை விண்ணில் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முயற்சியாக 3d பிரிண்டிங் ராக்கெட் தொழில்நுட்பம் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சில வருடங்களில் இன்ஸ்பேஸ் நிறுவனத்தால் அனுப்பப்படும் தனியார் ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பதிலாக குலசேகர பட்டணத்தில் இருந்து செல்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com