கூகிள் ஜெமினி 3
கூகிள் ஜெமினி 3web

வந்தாச்சு கூகிளின் Gemini 3.. ரூ.35,100 தொகுப்பை இலவசமாக பெறுவது எப்படி?

கூகிள், தன்னுடைடைய ஜெமினி 3 மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. என்னென்ன சிறப்பம்சங்கள், ₹ 35,100 தொகுப்பை இலவசமாக பெறுவது எப்படி? என இங்கே பார்க்கலாம்.
Published on

ஆல்ஃபபெட்டின் கூகிள், செவ்வாயன்று, அதன் artificial intelligence model-ஆன ஜெமினியின் சமீபத்திய பதிப்பை அறிமுகப்படுத்தியது. இது Search engine, AI ஸ்டுடியோ மற்றும் ஜெமினி செயலி உள்ளிட்டவைகளில் உடனடியாகக் கிடைக்கும். second generation model-க்கு பிறகு 11 மாதங்கள் கழித்து இது அறிமுகமாகியுள்ளது. AI பந்தயத்தில் முன்னணியில் வைத்திருக்க ஜெமினி 3 உதவும் என கூகிள் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தினுடைய blog post-ல் இதுகுறித்து பேசிய சுந்தர் பிச்சை, இதனை "our most intelligent model" என குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜெமினி நிறுவனம், இப்போது 650 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் 13 மில்லியன் டெவலப்பர்கள் அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகிறார்கள் என்று தெரிவித்தார்.

கூகிள் ஜெமினி 3
கூகிள் ஜெமினி 3

அதே போல, ஜெமினி 3-ஐ பொறுத்தவரை கூகிள் தனது புதிய மாடலை முதல் நாளிலிருந்தே அதன் தேடுபொறியில் இணைத்தது முதல் முறையாகும். கடந்த காலங்களில், ஜெமினியின் புதிய பதிப்புகள் கூகிளின் அதிகம் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளில் கொண்டுவர வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனது என்று சுந்தர் பிச்சை கூறினார். 

மாடல்களை வெளியிடுவதிலும், அதை முன்பை விட வேகமாக மக்களுக்குக் கொண்டு செல்வதிலும் ஜெமினி ஒரு புதிய வேகத்தை அமைத்துள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம் என்று கூகிளின் chief AI architect குறிப்பிட்டுள்ளார். 

கூகிள் ஜெமினி 3
இந்தியாவால் AI தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாது! - OpenAI CEO கருத்திற்கு டெக் மஹிந்திரா CEO சவால்!

இலவசமாக பெறுவது எப்படி..?

கூகிளின் பிரீமியம் AI சந்தா திட்டத்தின் பணம் செலுத்தும் பயனர்கள், AI பயன்முறையில் ஜெமினி 3 திறன்களை அணுக முடியும். மிகவும் சிக்கலான reasoning திறன்களுடன் இது கிடைக்கும். இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கிடைக்கும்.

ஜெமினி ப்ரோ மற்றும் அல்ட்ரா பயனர்கள் அதிக வரம்புகளுடன் அணுக முடியும். அதே போல, நிறுவனம் "ஜெமினி ஏஜென்ட்" ஐ அறிமுகப்படுத்தியது. இது பயனரின் இன்பாக்ஸை ஒழுங்கமைத்தல் அல்லது பயண ஏற்பாடுகளை முன்பதிவு செய்தல் போன்ற பல-படி பணிகளை முடிக்கக்கூடிய ஒரு அம்சமாகும். 

கூகிள் ஜெமினி 3
உண்மையான விபத்து போல வலம்வந்த FAKE AI வீடியோ.. Fun-க்காக உருவாக்கிய இளைஞர் கைது!
கூகிள் ஜெமினி
கூகிள் ஜெமினி

இதனை அடுத்து ரிலையன்ஸ் ஜியோ, கூகிளுடனான தனது AI பார்ட்னர்ஷிப்பில் ஒரு பெரிய upgrade-ஐ  அறிவித்துள்ளது. அந்தவகையில், ஒவ்வொரு ஜியோ அன்லிமிடெட் 5G வாடிக்கையாளரும் கூடுதல் செலவில்லாமல் 18 மாதங்களுக்கு  ₹35,100 மதிப்புள்ள தொகுப்பண கூகிள் ஜெமினி ப்ரோ திட்டத்தைப் பெறுவார்கள். இலவச ஜெமினி ப்ரோ திட்டத்தை பயனர்கள் எவ்வாறு பெறலாம் என்று பார்க்கும்போது, மைஜியோ செயலிக்குள் சென்று, Claim Now-ஐ கிளிக் செய்யவும். Google கணக்கில் உள்நுழையவும். இதனை அடுத்து உடனடியாக ஜெமினி 3 பயன்பாட்டுக்கு வரும். 

கூகிள் ஜெமினி 3
CHENNAI ONE APP | ரூ.1 டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.. முதல்முறை பயணம் செய்வோருக்கு சிறப்பு சலுகை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com