ஆர்டர் செய்த அதேநாளில் டெலிவரி! 20 நகரங்களில் "Same Day Delivery” சேவையை தொடங்கும் பிளிப்கார்ட்!

சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 20 நகரங்களில் Same Day Delivery சேவையை Flipkart நிறுவனம் தொடங்கியுள்ளது.
Flipkart
Flipkart web

இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மைகளை மனதில் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய 20 நகரங்களில் தங்களுக்கு வரும் ஆர்டர்களை ஒரே நாளில் டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது.

முதலில் 20 நகரங்களில் செயல்படுத்தப்படும் இந்த "Same Day Delivery” சேவையானது, பின்னர் அனைத்து நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நகரங்களில் சேவை பெறலாம்?

ஆன்லைன் பர்சேஸிங் இணையதளமான பிளிப்கார்ட், நாடு முழுவதும் உள்ள 20 நகரங்களில் ஒரே நாளில் டெலிவரி செய்யக்கூடிய சேவைக்கான அறிமுக தேதியை வெளியிடவில்லை. மாறாக பிப்ரவரி மாதத்தில் இருந்து சேவையை தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.

Flipkart
Flipkart

"Same Day Delivery” சேவையானது “சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், புவனேஷ்வர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மும்பை, நாக்பூர், புனே, பாட்னா, ராய்ப்பூர், சிலிகுரி மற்றும் விஜயவாடா” முதலிய 20 நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

எந்தெந்த பொருட்களை ஒரே நாளில் பெறலாம்?

முதலில் 20 நகரங்களுக்கும், பின்னர் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த சேவையானது, முதலில் குறிப்பிட்ட பொருட்களுக்கே வழங்கப்படுகிறது.

Flipkart
Flipkart

அதன்படி “மொபைல்கள், ஃபேஷன், அழகு சாதனப்பொருட்கள், புத்தகங்கள், லைஃப்ஸ்டைல், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்” ஆகியவை ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும் வகைகளில் அடங்குகின்றன.

பகல் 1 மணிக்குள் ஆர்டர் செய்யவேண்டும்!

பிளிப்கார்ட்டின் "Same Day Delivery” சேவைக்கான நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஆர்டர் செய்த அதே நாளில் டெலிவரி அம்சத்தை பெற விரும்பும் பயனர்கள், “மதியம் 1 மணிக்குள்” தங்கள் ஆர்டரைச் செய்ய வேண்டும்.

Flipkart
Flipkart

அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆர்டர் செய்யும் பொருட்கள் நள்ளிரவுக்கு முன் (இரவு 12 மணி) அவர்களின் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும். மதியம் 1 மணிக்கு மேல் ஆர்டர் செய்யும் பயனர்கள், தங்கள் ஆர்டர்களை அடுத்த நாள் டெலிவரிக்கு எதிர்பார்க்கலாம். விரைவில் இந்த சேவை பிளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

Flipkart
மனித மூளைக்குள் சிப் பொறுத்தும்முயற்சி! முதல் மனிதன் குணமடைந்துவருவதாக எலான் மஸ்க் ட்வீட் #Neuralink

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com