விண்வெளியில் புதிய விண்மீன்களை உருவாக்கும் கிராப் நெபுலாவின் X கதிர் தரவுகள் சேகரித்த ’XPoSat’!

XPoSat நமது சூரியன் போன்ற விண்மீன் உருவாக்கம் நடைபெறும் நெபுலாவின், ஆற்றலை அளவீடு செய்துள்ளது இந்தத் திட்டத்தின் மைல்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
எக்ஸ்போ சாட்
எக்ஸ்போ சாட்PT

இந்தியாவின் முதல் எக்ஸ்-ரே போலரிமெட்ரி செயற்கை கோள் கிராப் நெபுல்லாவின் ஆற்றல் மூலத்தை அளவீடு செய்துள்ளது.. நமது சூரியன் போன்ற விண்மீன் உருவாக்கம் நடைபெறும் நெபுலாவின், ஆற்றலை அளவீடு செய்துள்ளது இந்தத் திட்டத்தின் மைல்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் போலரி மீட்டர் சேட்டிலைட்டான XPoSat ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜனவரி 1ம் தேதி பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பப்பட்டது. சூரியன் சந்திரன், செவ்வாய் தாண்டி பிரபஞ்சத்தை பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தியா செயற்கைக்கோளை அனுப்பியது. குறிப்பாக நமது பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் நோவாக்கள் கருந்துளைகள் நெபுலாக்கள் போன்றவற்றின் எக்ஸ்ரே கதிர் தரவுகளை சேகரிப்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இரவு நேரத்தில் வான்வெளியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் தென்படுகிறது. அவை அனைத்தும் நமது பால்வெளி அண்டத்தில் அங்கங்கள். நட்சத்திரங்கள் அனைத்தும் சூரிய குடும்பத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஏற்கனவே இஸ்ரோ சந்திரன், செவ்வாய் சூரியன் போன்றவற்றை ஆய்வு செய்து வரும் நிலையில் சூரிய குடும்பத்திற்கு வெளியே பல நூறு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் மண்டலங்களின் எக்ஸ் கதிர் தரவுகளை சேகரிப்பதற்காக இரண்டு விதமான சென்சார்கள் எக்ஸ்போ சாட் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளது.

கிராப் நெபுலா
கிராப் நெபுலா PT

ஜனவரி 11-ம் தேதி எக்ஸ்போ சாட் செயற்கைக்கோளிலுள்ள XSPECT எனும் கருவியில் வெளியிடப்பட்ட தரவுகளில் காசியோபியா சூப்பர்நோவாவில் மூலம் பெறப்பட்ட தரவுகள் வெளியிடப்பட்டது. அதில் அந்த குறிப்பிட்ட சூப்பர் நோவாவில் இருந்து மக்னீசியம், இரும்பு, சிலிக்கான், கால்சியம் போன்றவை இருந்ததாக இஸ்ரோ தெரிவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சூரிய குடும்பத்திற்கு வெளியே இத்தகைய சூப்பர் நோவாவை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த கருவிகள் மூலம் அளவீடு செய்தது இதுவே முதல்முறை என்பதால் உற்சாகமாக இந்த அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டது. தொடர்ச்சியாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எக்ஸ்போர்ட் செயற்கைக்கோளில் உள்ள மற்றொரு அறிவியல் ஆய்வு கருவியான போலீக்ஸ் செயல்பட தொடங்கியது.

ஜனவரி 15 முதல் 18ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட அவதானிப்புகளில் கிராப் நெபுலா எனப்படும் நண்டு வடிவ நெபுலாவின் எக்ஸ் தரவுகளை எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் சேகரித்துள்ளது. பூமியில் இருந்து 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிராப் நெபுலாவில் நமது சூரியன் போன்று ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உள்ளது. மேலும் இதில் இருக்கும் தூசு மண்டலங்கள் நூற்றுக்கணக்கான சூரியன்களை உருவாக்கிக் கொண்டும் செயல் இழக்க வைத்தும் இருக்கிறது.

ஒரு வினாடிக்கு 1500 கிலோமீட்டர் அளவிற்கு விரிவடையும் திறன் பெற்ற இந்த நெபுலா சூரிய குடும்பத்திற்கு அருகே உள்ள நெபுலா மண்டலங்களில் ஒன்றாகும். ரேடியோ கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள், புற ஊதா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் மூலமாக ஏற்கனவே கிராப் நிபுலா குறித்த படங்கள் தரவுகளை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் சேகரித்துள்ளது. இருந்தாலும் இந்த நெபுலா பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும் நெபுலா என்பதால் இஸ்ரோ தற்போது எடுத்துள்ள தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்று ஆற்றல் மூலங்களின் தரவுகளை வெவ்வேறு மின்னோட்டங்களில் வெளியிட்டுள்ள இஸ்ரோ இது பழைய தரவுகளோடு ஒத்துப் போவதாக தெரிவித்துள்ளது.

எக்ஸ்போ சாட்
INSAT 3DS | இஸ்ரோவின் அடுத்த செயற்கைக்கோள்... இன்னும் சில தினங்களில் விண்வெளியில் மற்றொரு மைல்கல்..!

மேலும் இதற்கு முன்பு நாசாவின் தொலைநோக்கிகள் கிராப் நெபுலாவை எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. எக்ஸ்போ சாட் செயற்கைக்கோளிலுள்ள POLIX அறிவியல் ஆய்வுக் கருவி பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள எக்ஸ்ரே வானியல் ஆய்வகத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்தக் கருவியானது இந்திய தொழில்துறையின் ஆதரவுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இந்த திட்டத்தின் மூலம் சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில் தற்போது விண்மீன்கள் உருவாகும் தூசு மண்டலமான நெபுலாவையும் அதன் ஆற்றல் மூலங்களையும் இஸ்ரோ அளவீடு செய்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியே தனது அறிவியல் ஆய்வை இஸ்ரோ விஸ்திரபடுத்தியுள்ள நிலையில், நெபுலாக்களின் ஆற்றல் குறித்த தரவுகளை சேகரிப்பது இந்தத் திட்டத்தின் ஒரு மைல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com