செவ்வாய் கிரகம்முகநூல்
டெக்
செவ்வாய் கிரகத்தில் குடியேறுபவர்களுக்கு... எலான் மஸ்க் சொல்வது இதுதான்!
செவ்வாய் கிரகத்தில் குடியேறுபவர்கள் ஜனநாயக முறையை பின்பற்ற வேண்டுமென, ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் ஆட்சிமுறை பூமியிலுள்ள நாடுகளை பிரதிபலிக்குமா என, எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் குடியேறுபவர்கள் தங்களுக்கான ஆட்சி முறையை, தாங்களே தேர்ந்தெடுக்கலாம் என கூறியுள்ளார்.
அதேவேளையில், அவர்களுக்கு பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை விட நேரடி ஜனநாயகத்தை தான் பரிந்துரைப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். ஆளில்லா விண்கலங்கள், இன்னும் இரண்டு வருடங்களில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கலாம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 2028 டிசம்பர் அல்லது 2029 ஜனவரியில், ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.