டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையை நீக்க எலான் மஸ்க் பரிசீலித்து வருவதாக தகவல்! ஆனால்..?

டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையை நீக்க எலான் மஸ்க் பரிசீலித்து வருவதாக தகவல்! ஆனால்..?
டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையை நீக்க எலான் மஸ்க் பரிசீலித்து வருவதாக தகவல்! ஆனால்..?

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையை மாற்றியமைக்க எலான் மஸ்க் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் ட்விட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க், சமீபத்தில் அளித்த பேட்டியின் போது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டர் தடையை திரும்பப் பெறும் திட்டத்தில் இருப்பதாக கூறினார். முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, எலான் மஸ்க் சொன்ன இந்த கருத்துடன் உடன்படுகிறார். கடந்த ஆண்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டபோது டோர்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்ததால் அவர் மஸ்கின் கருத்தை ஏற்றது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

ட்விட்டரில் ஒரு பயனருக்குப் பதிலளித்த ஜாக் டோர்சி, டிரம்பின் ட்விட்டர் கணக்கைத் தடை செய்வது ஒரு "வணிக முடிவு" என்றும் "அது நடந்திருக்கக் கூடாது" என்றும் கூறினார். “டிவிட்டர் எப்போதும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பயனர்களுக்கு தேவையானதாக உருவாக வேண்டும். நிரந்தர தடைகள் நிறுவனத்திற்கு "தோல்வி"தான். சட்டவிரோத நடத்தை, ஸ்பேம் நெட்வொர்க் கையாளுதல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே நிரந்தரத் தடை செய்ய வேண்டும்” என்று கூறினார் ஜாக் டோர்சி.

டிரம்ப் ட்விட்டருக்கு திரும்புவாரா?

தனது ட்விட்டர் கணக்கு திரும்பப் பெற்றாலும் டிவிட்டருக்கு திரும்ப மாட்டேன் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார். ட்விட்டர் மற்றும் பல சமூக ஊடக தளங்கள் டிரம்ப் மீது தடை விதித்த பிறகு, அவரும் அவரது குழுவும் “ட்ரூத் சோஷியல்” என்ற சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தினர். சமீபத்திய பேட்டி ஒன்றில் டிரம்ப் “ எலான் மஸ்க் ட்விட்டரை மேம்படுத்துவார். அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் நான் ட்ரூத் சோஷியல் தளத்திலேயே இருக்கப் போகிறேன். நான் ட்விட்டருக்குத் திரும்பப் போவதில்லை” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com