47 வருடங்களாக பயணித்து வந்த நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் பூமியுடனான தொடர்பை இழந்ததா?

அதே சமயம் இந்த சூரிய குடும்பத்தையும் பிரபஞ்சத்தையும் தாண்டி என்ன இருக்கிறது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சித்தார்கள். இதன் விளைவாக, வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பினார்கள்.
வாயேஜர் 1
வாயேஜர் 1ட்விட்டர்

இந்த பிரபஞ்சத்தில் சூரிய குடும்பங்களைப்போல பல எண்ணெற்ற குடும்பங்களும் நட்சத்திர கூட்டங்களும் இருக்கிறது என்று நமக்கு விஞ்ஞானிகள் நிரூபித்துக்கொண்டே வருகிறார்கள். அதே சமயம் இந்த சூரிய குடும்பத்தையும் பிரபஞ்சத்தையும் தாண்டி என்ன இருக்கிறது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர். இதனொரு முயற்சியாக, வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பினார்கள்.

இந்த விண்கலமானது பூமியுடன் தொடர்பு கொண்டபடி பிரபஞ்சத்தில் எங்கும் நிற்காமல் சென்றுக்கொண்டே இருக்கக்கூடியது. இதை நாமே நினைத்தாலும்கூட நிறுத்தவும் முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படியாக வாயேஜர் 1, வாயேஜர் 2 விண்கலன்கள் ஆய்வுக்காக விண்ணில் வெவ்வேறு பாதைகளில் அனுப்பப்பட்டன. சமீபத்தில் வாயேஜர் 1 விண்கலமானது அதன் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தாலும், பூமியுடனான அதன் தொடர்பு நின்றுவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதை பற்றி இங்கு பார்க்கலாம்.

பிரபஞ்சத்தை தாண்டி என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக நாசா, வாயேஜர்1 என்ற விண்கலத்தை 1977 ஆகஸ்ட் 1 ம் தேதி விண்ணில் செலுத்தியது. செலுத்திய நாளிலிருந்து இன்றுவரை சுமார் 47 ஆண்டுகள் தொடர்ந்து அதன் பயணமானது நிற்காமல் நம் சூரியகுடும்பத்தையும், பல நட்சத்திர கூட்டத்தையும் தாண்டி சென்றுக்கொண்டே இருக்கிறது. இதன் இடைவிடாத பயணத்தில் விஞ்ஞானிகளே அதிசயிக்கும் படி பல அறிய தகவல்களை இது கண்டுபித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

விஞ்ஞானிகளின் தகவலின் படி வாயேஜர் 1 விண்கலமானது பூமியிலிருந்து சுமார் 2,400 கோடி கி.மீ தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர். ஆனால் சமீபத்தில் இதிலிருந்து வரும் சிக்னல் பூமிக்கு கிடைக்கவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வாயேஜர் 1 சிக்னலை திரும்பப்பெற விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். ஆனால் வாயேஜர் 2 இன்னும் பூமியுடன் தொடர்பில் உள்ளது என்பது ஆறுதலான செய்தி.

வாயேஜர் 1 சிறப்பு:

அமெரிக்காவின் வாயேஜர் 1 விண்கலத்தின் எடையானது 712.9 கிலோகிராம். வாயேஜர் 2 க்குப் பிறகுதான் வாயேஜர் 1 விண்வெளியில் ஏவப்பட்டது. ஆனால் வாயேஜர் 1 வேகமான தனது நடையின் காரணமாக, வாயேஜர் 2 விட வேகமாக சென்றது. சரியாக டிசம்பர் 15, 1977 இல் வாயேஜர் 2 ஐ முந்தியது வாயேஜர் 1.

வாயேஜரின் வேலை:

விண்வெளியில் உள்ள தரவுகளை சேகரிப்பதுடன், நமது சூரிய குடும்பத்தையும் தாண்டி விண்வெளியில் இருக்கும் நட்சத்திர குடும்பங்களையும் அதன் தரவுகளையும் சேகரித்து தருவது ஆகும்.

இதன் பயணம்:

வாயேஜர் 1 நமது சூரிய குடும்பத்தை பல ஆண்டுகளாக ஆராய்ந்தது. அத்துடன் அதன் பயணமானது சூரிய குடும்பத்தை தாண்டி பல மில்லியன்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் வியாழன் கிரகத்தில் ஒரு மெல்லிய வளையம் இருப்பதையும், வியாழனின் இரண்டு புதிய ஜோவியன் நிலவையும் கண்டுபிடித்தது. சனிக்கோளில் 5 புதிய நிலவுகள் மற்றும் அதை சுற்றி உள்ள ஜி-ரிங் எனப்படும் வளையத்தையும் கண்டுபிடித்தது.

வாயேஜர் 1 வியாழனில் இதன் கண்டுபிடிப்புகள்:

வாயேஜர் 1, ஏப்ரல் 1978 இல் வியாழனில் அதன் பணியை தொடங்கியது. இது வியாழனை கடக்கையில் அதை ஆராய்ச்சி செய்யத்தொடங்கியது. வியாழனின் வளிமண்டலம் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததை வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்து அனுப்பியது. வியாழனைச் சுற்றி ஒரு மெல்லிய (30 கிலோமீட்டர் தடிமன் கொண்ட) வளையம் இருந்ததை கண்டுபிடித்தது.

வாயேஜர் 1
அறிவியல் ஆச்சர்யங்கள் | நாம் கண்களால் காணும் கிரகங்களின் நிறங்கள் உண்மைதானா?

மேலும் அமல்தியா, அயோ, யூரோபா, கேனிமீட் மற்றும் காலிஸ்டோ என வியாழனில் பல நிலவுகள் இருப்பதையும் படம்பிடித்து அனுப்பியது. இதில் வியாழனில் உள்ள அயோ நிலவானது மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்தை கொண்டதாக இருந்தது. மேலும் வியாழனில் சுறுசுறுப்பான எரிமலைகள் இருப்பதையும், ஜோவியன் நிலவில் கந்தகம் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதையும் கண்டுபிடித்தது. மேலும் வியாழனில் தீப் மற்றும் மெட்டிஸ் ஆகிய இரண்டு புதிய நிலவுகள் இருப்பதையும் கண்டுபிடித்தது.

வியாழனை அடுத்து சனி கிரகத்தை வாயேஜர் 1 ஆராய்ந்தது. சனியின் சந்திரனான டைட்டனை விண்கலம் தாக்காது என்பதை உறுதி செய்தது. அத்துடன் சனியை சுற்றி டைட்டனை தவிற, 5 புதிய நிலவுகள் இருப்பதையும் கண்டறிந்தது. சனிக்கோளை சுற்றி ஜி-ரிங் வளையம் இருப்பதையும் கண்டுபிடித்தது. இந்த நிலவுகள் பெரும்பாலும் நீர் பனியால் இருந்தது. மேலும் டைட்டனில் நீர் மற்றும், நைட்ரஜன், மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதையும் கண்டறிந்தது.

வாயேஜர் பூமியை எடுத்த படம். புள்ளியாய் தெரிவது தான் பூமி
வாயேஜர் பூமியை எடுத்த படம். புள்ளியாய் தெரிவது தான் பூமிகூகுள்

தற்பொழுது வாயேஜர் 1, பூமியிலிருந்து சுமார் 2400 கோடி கி.மீ தூரம் தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. இதன் பேட்டரியை சேமிக்கும் விதமாக அதில் இருக்கும் சிலவகை பாகங்களை விஞ்ஞானிகள் நிறுத்தி வைத்திருந்தாலும் பூமிக்கு வரும் சிக்னலின் தொடர்பானது நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தூரம் காரணமாகவோ அல்லது இதில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவோ பூமியுடனான இதன் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அதை சரி செய்ய விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள். இதில் சமீபத்திய அப்டேட்டாக, விண்மீன் இடைவெளியில் இருந்து விசித்திரமான பைனரி சிக்னல் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. பார்க்கலாம் என்ன நடக்க இருக்கிறது என்று....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com