எக்ஸ், யூட்யூப், டெலிகிராம்
எக்ஸ், யூட்யூப், டெலிகிராம்முகநூல்

"சிறார் ஆபாச பதிவுகளை நீக்குக" மத்திய அரசு எச்சரிக்கை!

சிறார் ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று எக்ஸ், யூட்யூப், டெலிகிராமுக்கு போன்ற சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு ஆணை பிறப்பித்துள்ளது. ஆபாச பதிவுகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெர்விக்கப்பட்டுள்ளது.
Published on

சிறார் ஆபாசக் காட்சிகளை எக்ஸ், யூட்யூப், டெலிகிராம் போன்ற 3 நிறுவனங்களும் தங்கள் தளங்களிலிருந்து விரைந்து அகற்ற வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தவறும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்புகள் திரும்பப் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார்.

இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்
இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் முகநூல்

குறிப்பிட்ட 3 சமூகவலைதளங்களும் தங்கள் இந்தியப் பிரிவில் பதிவேற்றப்பட்டுள்ள சிறார் ஆபாசக் காட்சிகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் என அரசு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

எக்ஸ், யூட்யூப், டெலிகிராம்
குழந்தைகள் வன்முறை வீடியோவை வலைதளங்களில் வெளியிடாதீர்: குழந்தை நல செயற்பாட்டாளர் கோரிக்கை

அதில் மேலும், “இதுபோன்ற ஆட்சேபிக்கத்தக்கப் பதிவுகள் தொடர்பாக முறையீடுகள் செய்யவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய நடைமுறைகளை ஏற்படுத்தவும். விரும்பத்தகாதப் பதிவுகள் இடம் பெறுவதை தடுக்கவும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com