அதே லுக்கு.. விண்டேஜ் ஃபீல் - புதிய தொழில்நுட்பத்துடன் ’புல்லட் 350’ அறிமுகம்-விலை எவ்வளவு தெரியுமா?

புதிய தொழில்நுட்பத்துடன் புல்லட் 350 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
bullet bike
bullet bikept web

புல்லட் என்றதும் கிராமங்களில் தலைக்கட்டுகளும் சினிமாக்களில் காட்டப்பட்ட முறுக்கு மீசை ஆட்களுமே ஞாபகத்திற்கு வருவர். 'நாங்க எல்லாம் அந்த காலத்துல' என பெரியவர்கள் பழைய கதை பேச ஆரம்பித்தால் அதில் நிச்சயம் புல்லட் குறித்த கதைகளும் இடம் பெறும்.

மக்களது விருப்பத்தை எப்போதும் கொண்டிருக்கும் சில விண்டேஜ் பொருட்களில் புல்லட்டும் ஒன்று. இந்நிலையில் நவீனமாக வடிவமைக்கப்பட்ட என்ஜினுடன் புதிய வடிவில் புல்லட் வாகனத்தை அறிமுகப்படுத்தினால், பைக் பிரியர்களுக்கு அதை விட கொண்டாட்டம் வேறு என்ன இருக்கும்.

1932 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புல்லட் மாடல் ஏறத்தாழ 90 ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக யுசி இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஜே சீரிஸ் இன்ஜின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 350 சிசி செயல் திறன் கொண்டது. 3 வகைகளில் புதிய வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மிலிட்டரி, ஸ்டாண்டார்டு, பிளாக் கோல்ட் போன்றவைகள் அடக்கம்.

புதிய வடிவமைப்பில் புல்லட் வாகனங்களுக்கான லுக் என்னவோ அதை அப்படியே கொண்டுவந்துள்ளது என்பீல்ட் நிறுவனம். வாகனத்தில் இடம்பெற்றுள்ள ராயல் என்பில்டு நிறுவனத்தின் பெயர் கூட அதே ஸ்டைலில் இடம்பெற்றுள்ளது.

இதன் விலை ரூ.1.70 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத்தை வவாங்குவதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com