உத்திரபிரதேசம்: பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை; 45 வருடங்களுக்கு முன் இவரது தந்தையும் இதேபோல் கொலை!

உ.பி.ஜான்பூர் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பிரமோத் குமார் யாதவ்
சுட்டுக்கொல்லப்பட்ட பிரமோத் குமார் யாதவ்PT

போதாபூரில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பிரமோத் குமார் யாதவ் சிக்ராராவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தின் போதாபூர் கிராமத்தைச் சேர்ந்த பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் முன்னாள் மாவட்டத் தலைவர் பிரமோத் யாதவ் (55). இவர் தற்போது பாஜக மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட பிரமோத் குமார் யாதவ்
”நள்ளிரவு 12.30 மணிக்கு மகன் இறந்ததா போன் வந்துச்சு” - இஸ்ரேல் - பாலஸ்தீனிய போரில் கேரள நபர் மரணம்!

இவர்,நேற்று வீட்டிற்கு தனது காரில் வந்தபொழுது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக மர்ம நபர்கள் அவரின் காரை நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், அவர் காரை நிறுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மர்மநபர்கள் தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியால் பிரமோத்யாதவ்வை 3 முறை சுட்டுவிட்டு அங்கிருந்து சிறிது தூரத்தில் பைக்கை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மர்மநபர்கள் விட்டுச்சென்ற பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் அஜய் பால் சர்மாவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அஜய் பால் சர்மா
அஜய் பால் சர்மாPT

முன்னதாக 1980 ஆண்டு பிரமோத்யாதவின் தந்தை ராஜ்பாலியாதவும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com