”நள்ளிரவு 12.30 மணிக்கு மகன் இறந்ததா போன் வந்துச்சு” - இஸ்ரேல் - பாலஸ்தீனிய போரில் கேரள நபர் மரணம்!

இஸ்ரேல் பாலஸ்தீனயருக்கும் இடையே நடந்த ஏவுகணை தாக்குதலில், கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் இறந்தார் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
பாட் நிபின் மேக்ஸ்வேல் இறந்தவர்
பாட் நிபின் மேக்ஸ்வேல் இறந்தவர்PT

இஸ்ரேல் பாலஸ்தீனயருக்கும் இடையே நடந்த ஏவுகணை தாக்குதலில், கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இஸ்ரேல் பாலஸ்தீனிய போர் எதற்காக?

இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதலுக்கு முக்கிய காரணம் இரு நாடுகளுக்குமிடையே இருக்கும் காசா பகுதியாகும். காசா பகுதி என்பது பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியை இஸ்ரேல் அரசு மீட்க அமெரிக்காவின் உதவியுடன் முயற்சித்து வருகிறது.

ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர்

இரு நாடுகளுக்கும் மோதல் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கேரள மாநில, கொல்லத்தை சேர்ந்த பாட் நிபின் மேக்ஸ்வேல் என்ற இந்தியர் கொல்லப்பட்டார். இவரது சடலம் ziv மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் காயமடைந்து இஸ்ரேலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

NGMPC22 - 147

இந்நிலையில், தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாட் நிபின் மேக்ஸ்வேல் என்பவருக்கு ஏழுமாத கர்பிணி மனைவியும் ஐந்து வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது இறப்பினை இவர்கள் குடும்பம் உறுதிசெய்துள்ளது.

பாட் நிபின் மேக்ஸ்வேல் இறப்பு குறித்து இவரது தந்தைஆண்டனி மேக்ஸ்வெல் கூறுகையில் ” மாலை 4.30 மணியளவில் எனது மருமகள் எனக்கு போன் செய்து நிபின் கொல்லப்ப்பட்டதாக தெரிவித்தார். மீண்டும் நள்ளிரவு 12.30 மணியளவில் எங்கள் மகன் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com