ஸ்மார்ட்போன்ஸ்: செல்ஃபி பிடிக்குமா? அப்ப இதப்படிங்க!
தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் முதல் பிரபலங்கள், முதியவர்கள் அனைவரிடமும் ஏற்பட்டுள்ள ஒரு
கலச்சாரமாய் செல்ஃபி புகைப்படம் உள்ளது. சிலர் ஸ்மார்ட்போன் வாங்கும் போதே செல்ஃபி கேமரா எத்தனை எம்பி, முன்புறம் ஃப்ளாஸ் லைட் உள்ளதாக என்று பார்த்துவிட்டு தான் வாங்குகின்றனர். அந்த அளவிற்கு செல்ஃபி புகைப்படங்களுக்கு முக்கியவத்தும் கொடுக்கப்படுகிறது. சிலர் ஸ்மார்ட்போன் வாங்கும் போதே செல்ஃபி ஸ்டிக்குகளையும் சேர்த்து வாங்கி விடுகின்றனர். திருமணம், அவுட்டிங், விழா, பிறந்த நாள் கொண்டாட்டம், திரைப்படம், கிரிக்கெட் என எங்கு சென்றாலும் செல்ஃபி தான். அதை உடனே முகநூலில் பதிவிட்டு மகிழ்கின்றனர். இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் செல்ஃபி கேமராவுக்கு முக்கியவத்துவம் அளித்து தங்கள் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கின்றன.
அந்த வகையில் செல்ஃபி எடுப்பதில், இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ள சில ஸ்மார்ட்போன்கள் இங்கே
பட்டியலிடப்பட்டுள்ளன.
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ
செல்ஃபி கேமரா : 20 எம்பி (முன்புற ஃப்ளாஷ் லைட்)
டிஸ்ப்ளே : 6 இன்ச்
ரேம் : 4 ஜிபி
பின்புற கேமரா : 12 எம்பி
பேட்டரி : 4000 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
ஒன் ப்ளஸ் 5டி
செல்ஃபி கேமரா : 16 எம்பி
டிஸ்ப்ளே : 6 இன்ச்
ரேம் : 8 ஜிபி
பின்புற கேமரா : 16 எம்பி (இரட்டைக் கேமரா)
பேட்டரி : 3300 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 128 ஜிபி
சியோமி ரெட்மி ஒய்1
செல்ஃபி கேமரா : 16 எம்பி
டிஸ்ப்ளே : 5.5 இன்ச்
ரேம் : 4 ஜிபி
பின்புற கேமரா : 13 எம்பி
பேட்டரி : 3080 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5
செல்ஃபி கேமரா : 16 எம்பி (முன்புற ஃப்ளாஷ் லைட்)
டிஸ்ப்ளே : 5.98 இன்ச்
ரேம் : 6 ஜிபி
பின்புற கேமரா : 12 எம்பி
பேட்டரி : 4350 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
மோட்டோ எக்ஸ் 4
செல்ஃபி கேமரா : 16 எம்பி (முன்புற ஃப்ளாஷ் லைட்)
டிஸ்ப்ளே : 5.2 இன்ச்
ரேம் : 3 ஜிபி
பின்புற கேமரா : 12 எம்பி
பேட்டரி : 3000 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 32 ஜிபி
ஆசஸ் சென்ஃபோன் 4 செல்ஃபி
செல்ஃபி கேமரா : 20 எம்பி மற்றும் 8 எம்பி (இரட்டைக்கேமரா)
டிஸ்ப்ளே : 5.5 இன்ச்
ரேம் : 4 ஜிபி
பின்புற கேமரா : 16 எம்பி
பேட்டரி : 3000 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
சாம்சங் கேலக்ஸி ஏ8+
செல்ஃபி கேமரா : 16 எம்பி மற்றும் 8 எம்பி
டிஸ்ப்ளே : 6 இன்ச்
ரேம் : 6 ஜிபி
பின்புற கேமரா : 16 எம்பி
பேட்டரி : 3500 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
நோக்கியா 7 ப்ளஸ்
செல்ஃபி கேமரா : 16 எம்பி
டிஸ்ப்ளே : 6 இன்ச்
ரேம் : 4 ஜிபி
பின்புற கேமரா : 12 எம்பி
பேட்டரி : 3800 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
விவோ வி9
செல்ஃபி கேமரா : 24 எம்பி (முன்புற ஃப்ளாஷ் லைட்)
டிஸ்ப்ளே : 6.3 இன்ச்
ரேம் : 4 ஜிபி
பின்புற கேமரா : 16 எம்பி
பேட்டரி : 3260 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி
ஓப்போ எஃப் 7
செல்ஃபி கேமரா : 25 எம்பி
டிஸ்ப்ளே : 6.23 இன்ச்
ரேம் : 4 ஜிபி
பின்புற கேமரா : 16 எம்பி
பேட்டரி : 3400 எம்ஏஎச்
ஸ்டோரேஜ் : 64 ஜிபி