பழைய காருக்கு பெயிண்ட் செய்து விற்பனை: மாருதி சுசூகி டீலரின் உரிமையை ரத்து செய்த அசாம்!

பழைய காருக்கு பெயிண்ட் செய்து விற்பனை: மாருதி சுசூகி டீலரின் உரிமையை ரத்து செய்த அசாம்!
பழைய காருக்கு பெயிண்ட் செய்து விற்பனை: மாருதி சுசூகி டீலரின் உரிமையை ரத்து செய்த அசாம்!

பழைய காருக்கு பெயிண்ட் செய்து விற்பனை செய்ததாக கூறப்பட்ட புகாரால், மாருதி சுசூகி டீலரின் வர்த்தக உரிமையை அசாம் அரசு ரத்து செய்தது.

வாடிக்கையாளர் ஒருவர் அசாம் அரசின் போக்குவரத்துத் துறையிடம் புகார் ஒன்றை பதிவு செய்தார். அதில், தனக்கு வழங்கப்பட்ட கார் பழையது என்றும், பழைய காரை புதிதாக பெயிண்ட் செய்து விற்பனை செய்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், டீலர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி, கம்ரூப் பகுதியின் போக்குவரத்து அதிகாரி காதம் தாஸ், கவுகாத்தியில் உள்ள ஷோரூமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பல முரண்பாடான விஷயங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும் அதிகாரிகளின் சோதனையில், பழைய காருக்கு அவர்கள் பெயிண்ட் செய்து புதியதுபோல் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்தான விசாரணையில், பாட்டர் கார் வேர்ல்ட் டீலரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து மாருதி சுசூகி டீலரின் வர்த்தக உரிமையை அசாம் அரசு தற்காலிகமாக ரத்து செய்தது. விசாரணை முடியும் வரை எந்த வர்த்தகத்திலும் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இந்த புகார் குறித்தும் மாருதி சுசூகி இந்தியா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை

அசாமில் மாருதி சுசூகி டீலர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. 2015-16ம் ஆண்டில் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு ஷோரூமின் டீலர் முறைகேடாக ஈடுபட்டதால் அந்த ஷோரூம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com