விலங்குகளுக்கான செயற்கை இறைச்சி; செக் நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனம் செய்த சாதனை!

செக் நாட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பீன் (BENE) மீட் டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்த செயற்கை இறைச்சி ஐரோப்பிய யூனியனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
laboratory-grown meat
laboratory-grown meatpt web

செயற்கை இறைச்சி கண்டுபிடிப்பில் உலகம் முழுவதிலும் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்காவில் அப்சைட் ஃபுட்ஸ் (Upside Foods) மற்றும் குட் மீட் (Good Meat) போன்ற நிறுவனங்கள், சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக, மனிதர்களின் நுகர்வுகளுக்காக செயற்கை இறைச்சியை தயாரித்து ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் (Regulatory Approvals) பெற்றுள்ளது. ஆனால், மிகப்பெரிய அளவில் தயாரிப்புகளை மேற்கொள்ளவில்லை.

ஆனால், BENE நிறுவனம் செல்லப் பிராணிகளுக்கான உணவுத் தயாரிப்பில் தனது கவனத்தை செலுத்தியது. இந்நிறுவனம் ஐரோப்பாவில் செயற்கை இறைச்சி தயாரிப்பு மற்றும் விற்பனைக்காக அனுமதி பெற்ற முதல் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோமன் கிரிஸ், “பூனைகள் மற்றும் நாய்களுக்கான செயற்கை இறைச்சி தயாரிப்புக்கும் விற்பனை செய்வதற்கும் உலகளவில் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற முதல் நிறுவனமாக மாறியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

வளர்ப்பு பிராணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இறைச்சியை அடுத்த சில ஆண்டுகளில் அதிகளவில் தயாரிக்க செக் நாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதற்கு உலகெங்கும் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. மேலும் இது மறைமுகமாக உலக வெப்பமயமாதலுக்கும் வழிவகுப்பதாகவும் விமர்சனங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், விலங்குகளை கொல்லாமல் செயற்கை முறையில் இறைச்சி தயாரிப்பது தொடர்பான ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்ப ரீதியில் செயற்கை இறைச்சி சாத்தியமானாலும் வணிக ரீதியாகவும் அவற்றை வெற்றிகரமாக்கும் முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. விலங்குகளின் உடலில் உள்ள செல்லை பிரித்தெடுத்து அதை ஆய்வகத்தில் வளர்ப்பது மூலம் செயற்கை இறைச்சி உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com