Android users
Android usersFB

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அரசு.. என்ன சிக்கல்? என்ன செய்ய வேண்டும்?

உங்கள் Android மொபைலில் பாதுகாப்பு புதுப்பிப்புகள் கிடைக்குமானால், அவற்றை உடனடியாக அப்டேட் செய்வதை உறுதிசெய்யவும்.
Published on
Summary

ஆண்ட்ராய்டு 15 மற்றும் 16 பயனர்கள் முக்கிய பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து இந்திய அரசாங்கத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சிக்கல்கள் குறித்து பயனர்கள் தங்கள் சாதனங்களில் முக்கியமான பாதுகாப்பு அப்டேட்களை உடனடியாகப் பெற வேண்டும்.. இதனால் தங்கள் சாதனங்களை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கலாம்.

ஆண்ட்ராய்டு என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மொபைல்களில் ஒன்றாகும். இதில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் பிற மொபைல் சாதனங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஆண்ட்ராய்டு, லினக்ஸ் கெர்னலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு என்பது ஓப்பன் சோர்ஸ் இயங்குதளம் ஆகும்.. இதனால், பல நிறுவனங்கள் தங்களது சொந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டை பயன்படுத்துகின்றன.

Android users
Android usersFB

இதில் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்களை சந்தையில் காணலாம். சாம்சங்கின் புதிய போன்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு 16 மற்றும் 15 மொபைல் போன்களுக்கு இந்த வாரம் இந்திய அரசாங்கத்திடமிருந்து ஒரு பெரிய பாதுகாப்பு எச்சரிக்கை வந்துள்ளது. அதில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்பு நிறுவனம், ஆண்ட்ராய்டு மென்பொருளில் உள்ள பல பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது பயனர்களைக் குறிவைத்து தாக்கலாம் என இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

Android users
Android usersFB

இந்த புதிய பாதுகாப்பு எச்சரிக்கை அனைவரின் மத்தியிலும் ஒரு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது... ஏனெனில் இது பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளை மட்டுமல்ல, சமீபத்திய பதிப்புகளையும் பாதிக்கிறது என்று இந்திய அரசு எச்சரித்துள்ளது.. இது தற்போது சாம்சங் போன்ற பிராண்டுகளின் வரையறுக்கப்பட்ட சாதனங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.. ஆண்ட்ராய்டு பாதுகாப்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அனைத்து உற்பத்தியாளர்களும்தான் பொறுப்பு என்றும் அரசாங்கத்தின் விவரங்களை களவு செய்தல் அதனால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் அதன் சாத்தியமான தாக்கம் நம் அனைவரையுமே பாதிக்கும்..

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பிரச்சினை

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) கூறுகையில், “கட்டமைப்பு (Framework), அமைப்பு (System), Google Play System updates, Kernel, MediaTek, மற்றும் Qualcomm போன்ற கூறுகளின் குறைபாடுகளை உள்ளடக்கியவை. இந்த குறைபாடுகளை சிக்கலாக்கி, ஹேக்கர்கள் சாதனத்தில் நுழைந்து தகவல்களை திருடவும், arbitrary code-களை இயக்கவும் அல்லது சேவை மறுக்கப்படும் நிலையை (DoS) ஏற்படுத்தவும் முடியும்” என்று கூறுகிறது.

Android users
பள்ளி மாணவர்களுக்கு 5 தலைப்புகளில் இலவச ஏ.ஐ கல்வி.. மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

பிரச்சனைகள் குறித்து ஆண்ட்ராய்டு தரப்பு என்ன சொன்னது?

ஆண்ட்ராய்டில் உள்ள தொழிநுட்ப வல்லுநர்கள் அரசாங்கத்தால் முன்னிலைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்து சரிசெய்துள்ளனர், மேலும் ஆகஸ்ட் 2025 க்கான விரிவான செய்திக்குறிப்பில் அவற்றை குறிப்பிட்டுள்ளது .

ஆண்ட்ராய்டு சாதனங்களைப் பற்றிப் புகாரளிக்கப்பட்ட அனைத்து பாதிப்புகளையும் நிவர்த்தி செய்வதாக நிறுவனம் கூறுகிறது. எனவே, உங்கள் சாதனத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் மொபைலில் இயங்கும் பதிப்பைச் சரிபார்த்து, சமீபத்திய ஆகஸ்ட் 2025 பாதுகாப்பு இணைப்பை அப்டேட் செய்ய வேண்டும்.. Samsung, OnePlus, Xiaomi மற்றும் Vivo போன்ற பிராண்டுகள் தங்கள் பாதுகாப்பு புதுப்பிப்புகளில் பணியாற்றி வருகின்றன..

Android users
ராஜேந்திர சோழனை வைத்து வீடியோ கேம் உருவாக்கம்.. ட்ரெய்லர் வெளியீடு!

ஆண்ட்ராய்டு பயனர் என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் பாதுகாப்பு புதுப்பிப்புகள் கிடைக்குமானால், அவற்றை உடனடியாக அப்டேட் செய்வதை உறுதிசெய்யவும்.

2. Google Play Protect போன்ற மென்பொருளைப் (software) பயன்படுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும்.

3. உங்கள் மொபைலில் அல்லது பதிப்பில் ஏதேனும் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளதா என்பதை அறிய, அரசாங்க ஆதாரங்கள் அல்லது நம்பகமான தொழில்நுட்ப இணையதளங்களை பார்த்து சரிசெய்யவும்

4. இதனால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதிலிருந்து பாதுகாக்கவும்.

5. புதுப்பிப்புகள் மூலம், உங்கள் சாதனம் எப்போதும் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.

6. இந்தப் பாதுகாப்பு சிக்கல்கள் உங்கள் சாதனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால், உடனடியாக அப்டேட்களை செய்வது மிகவும் முக்கியமானது.

Android users
இந்தியாவில் அறிமுகமானது கூகுளின் புதிய பிக்சல் 10 ஸ்மார்ட்போன்.. இதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அப்டேட் செய்ய பயனர் என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் Settings செல்ல வேண்டும்.

2. Software Update-ஐ தெரிவு செய்துக்கொள்ளவும்.

3. புதிய பதிப்பை (updated app) download செய்து instal செய்யவும்.

4. செயல்முறையை முடிக்க உங்கள் மொபைல் போனை Restart செய்ய வேண்டும்.

MediaTek மற்றும் Qualcomm சார்ந்த சாதனங்கள் பலமாக இருப்பதால், இந்த பிரச்சனை பெரும் எண்ணிக்கையிலான பயனாளர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், இந்த அப்டேட்களை மிகவும் அவசரமாக செய்து முடிப்பது நல்லது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com