Vaijayanthi S
கூகுளின் புதிய பிக்சல் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், புதிய Google Tensor ஜி5 சிப், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் அதிநவீன கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன.
பிக்சல் சாதனங்களின் புதிய வரிசையில் பிக்சல் வாட்ச் 4 மற்றும் பிக்சல் பட்ஸ் 2ஏ ஆகியவை அடங்கும். இந்த சாதனங்கள் அனைத்தும் கூகிள் ஜெமினியால் இயக்கப்படும் AI அம்சங்களின் விரிவான தொகுப்போடு வருகின்றன.
கூகிள் பிக்சல் 10 தொடர் என்பது அனைத்து மாடல்களிலும் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்ட நிறுவனத்தின் முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் வரிசையாகும். இதன் அனைத்து மாடல்களிலும் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்ட நிறுவனத்தின் முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் வரிசையாகும்.
அதில் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் விலை 79, 999 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூகுள் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL மற்றும் Pixel 10 Pro Fold ஆகிய நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகிள் பிக்சல் 10, கூகிள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் கூகிள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகியவை இப்போது முன்கூட்டிய ஆர்டர்கள் செய்தாலே கிடைக்கின்றன, மற்ற சாதனங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று போன்களும் ஆகஸ்ட் 28 அன்று கூகிள் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் ஷாப்களில் கிடைக்கும்.