கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... களைகட்டும் ஏ.ஐ வீடியோ!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... களைகட்டும் ஏ.ஐ வீடியோ!எக்ஸ் தளம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | ஏ.ஐ மூலம் அரசியல் தலைவர்கள்.. வைரலாகும் வீடியோ!

கிறிஸ்துமசை ஒட்டி ஏஐ முறையில் உருவாக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் பல துறை பிரபலங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக தளங்களில் பரவி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில், தற்போதுள்ள பிரபலங்கள் தவிர மறைந்த பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர்.

அம்பேத்கர், அப்துல் கலாம், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்களும் வின்ஸ்டன் சர்ச்சில், ராணி எலிசபெத், மார்கரெட் தாட்சர், மார்ட்டின் லூதர் கிங் போன்ற வெளிநாட்டு தலைவர்களின் காட்சிகளும் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன. டெண்டுல்கர், விராட் கோலி, பீலே போன்ற விளையாட்டு வீரர்களும் இப்பதிவில் உள்ளனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... களைகட்டும் ஏ.ஐ வீடியோ!
“தேவாலயம் வருவது புதிதல்ல... ஏழு ஆண்டுகள் கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன்” - பாஜக தலைவர் அண்ணாமலை

சார்லி சாப்ளின், மிஸ்டர் பீன் போன்றவர்களும் இடம் பெற்றள்ளனர். பில் கேட்ஸ், ஐன்ஸ்டீன், ரத்தன் டாடா, மைக்கேல் ஜாக்சன், டிம் குக், ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ், ஜஸ்டின் பைபர் போன்ற பிரபலங்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல, தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இன்று ஒரு ஏ.ஐ புகைப்படத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் முன்னாள் கலைஞர் கருணாநிதியுடன், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துமஸ் உடையோடு உள்ளனர். இதுவும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com