கிறிஸ்துமஸ் தினத்தில் பெசண்ட்நகர் தேவாலயத்தில் அண்ணாமலை சிறப்புப் பிராத்தனை
தேவாலயத்தில் அண்ணாமலை பிரார்த்தனைஎக்ஸ் தளம்

“தேவாலயம் வருவது புதிதல்ல... ஏழு ஆண்டுகள் கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன்” - பாஜக தலைவர் அண்ணாமலை

“இந்த அற்புதமான நன்னாளில் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” - அண்ணாமலை
Published on

கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தமிழகத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளார்களை சந்தித்து பேசினார் அவர்.

கிறிஸ்துமஸ் தினத்தில் பெசண்ட்நகர் தேவாலயத்தில் அண்ணாமலை
கிறிஸ்துமஸ் தினத்தில் பெசண்ட்நகர் தேவாலயத்தில் அண்ணாமலை

அப்போது,

இந்த அற்புதமான நன்னாளில் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. தேவாலயம் வருவது எனக்கு புதிதல்ல. ஏழு ஆண்டுகள் கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன். இன்று ஒரு முக்கிய நாள்.. இந்த நாளில் நடைபெறும் இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என இந்த தேவாலயத்தின் திருச்சபை தந்தையர் அழைத்தார். உலக மக்கள், தமிழ் மக்கள், இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனிடம் ஒன்றரை மணி நேரம் அமைதியாக வேண்டுதல் வைக்க ஒரு வாய்ப்பாக இது கிடைத்தது” என்றார்.

கிறிஸ்துமஸ் தினத்தில் பெசண்ட்நகர் தேவாலயத்தில் அண்ணாமலை சிறப்புப் பிராத்தனை
கிறிஸ்துமஸ் தினத்தில் பெசண்ட்நகர் தேவாலயத்தில் அண்ணாமலை சிறப்புப் பிராத்தனை

சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற பின் வெளியே வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அங்கு இருந்த பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

கிறிஸ்துமஸ் தினத்தில் பெசண்ட்நகர் தேவாலயத்தில் அண்ணாமலை சிறப்புப் பிராத்தனை
கிறிஸ்துமஸ்.. New Year | பண்டிகை காலத்தையொட்டி விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

பின்னர், இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை... “இன்றைய தினம், சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, அன்னை வேளாங்கண்ணி பேராலயத்திற்குச் சென்று, கிறிஸ்துமஸ் திருநாள் விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

கிறிஸ்துமஸ் தினத்தில் பெசண்ட்நகர் தேவாலயத்தில் அண்ணாமலை சிறப்புப் பிராத்தனை
அண்ணாமலைX தளம்

பேராலயத்திற்கு வந்திருந்த சகோதர சகோதரிகள் அனைவரும் தங்கள் அன்பான வாழ்த்துக்களால், இந்த நாளை இனிமையாக்கினர். தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும், அன்பும் நிரம்பியிருக்கவும், சமத்துவமும், சகோதரத்துவமும் இருக்க இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com