\
Vaiko, Vijay
Vaiko, Vijayweb

’தவெக ஆட்சியில் ஊழல் இல்லை.. அவர்களுக்கே ஆதரவு’ - வைகோ பேச்சு

சமூக நீதி, மும்மொழி எதிர்ப்பு, அண்ணா கொள்கை காரணம் என கூறி திமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டிய வைகோ, தவெக அரசுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
Published on
Summary

2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து திமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக தலைவர் வைகோ, தங்களுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதும், தனிச் சின்னம் மறுக்கப்பட்டதும் கட்சித் தொண்டர்களில் அதிருப்தி ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர் - M. மீரா

2026 சட்டமன்றத் தேர்தலின் போதே திமுக மற்றும் மதிமுக இடையே சின்னம் தொடர்பாகவும், தொகுதிகள் குறித்தும் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. மேலும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு தனிச் சின்னம் ஒதுக்காததால் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. இது மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

மதிமுக தலைவர் வைகோ தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 2 நாள்களுக்கு முன்பு தவெக பல அதிசயங்களை ஏற்படுத்தும் என்றார். பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு தவெகவிற்கு அதிகமாக இருப்பதாக கருத்து தெரிவித்தார் .

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோweb

பின்பு தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து தவெகவுக்கு ஆதரவாக வைகோவின் கருத்துக்கள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதனால் திமுக ஆதரவாளர்கள் மதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவை கூட்டி முடிவெடுத்து அறிவித்துள்ளார் வைகோ.

கூட்டணியிலிருந்து வெளியே வந்தவுடன் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் வைகோ. 4 தொகுதிகள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். நான்கு தொகுதிகள் போதாது என்றால் அப்போதே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கலாமே ? என்ற கேள்விக்கு தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி தர்மத்திற்காக தொடர்ந்தோம் என்று பதிலளித்தார்.

Vaiko & Vijay
Vaiko & Vijay web

தவெக அரசு மீதான குதிரை பேரம் குற்றசாட்டு குறித்து வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆவேசப்பட்ட வைகோ, எங்களுடைய எம்எல்ஏ செந்தில் செல்வனை திமுக பக்கம் இழுத்தது குதிரை பேரமா? அல்லது ஒட்டக பேரமா? குதிரை பேரம் நடத்தும் கட்சி எது? திமுக குதிரை பேரம் நடத்தி தான் எங்களுடைய எம்எல்ஏக்களை கொண்டு சென்றார்களா? என ஆவேசமாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் வைகோ. மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா பண்ண மாட்டோம் என்று கூறிவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

தவெக ஆட்சியில் ஊழல் இல்லை, கமிஷன் கேட்பதில்லை போன்ற நல்ல விஷயங்களுக்காகவும், சமூக நீதியை பின்பற்றுவது, மும்மொழி கொள்கையை எதிர்ப்பது, பேரறிஞர் அண்ணா கொள்கையை பின்பற்றி வருவது போன்ற காரணங்களுக்காக மதிமுக ஆதரவு என்ற நிலை எடுத்ததாக கூறியுள்ளார். அதே நேரத்தில் சில விமர்சனத்தை சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் வந்தால் அதையும் மதிமுக செய்யும் என தெரிவித்துள்ளார்.

2 மதிமுக எம் எல் ஏக்களும் ராஜினாமா செய்து இடைத் தேர்தலில் நிற்கவைக்கப்பட்டால் அவர்களை வெற்றி பெற வைப்பது என் பொறுப்பு என்று தவெக தலைவர் விஜய் கூறியதாகவும் வைகோ கூறினார்.

Vaiko, Vijay
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்.!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com