\
நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைது
நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைதுpt / instagram

தனிஷ்க் நகைக் கடை கொள்ளை! பிரபல பெண் YouTuber கைது! தோண்ட தோண்ட அதிர்ச்சி!

தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் பிரபல பெண் YouTuber கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பற்றிய பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
Published on: 
Summary

தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில், பிரபல YouTuber மீனாட்சி கைது செய்யப்பட்டு, 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நிஷாந்த் தலைமறைவாக உள்ள நிலையில், அவருடன் தொடர்பு கொண்டதாக கூறப்படும் மீனாட்சியின் செயல்பாடுகள் சினிமா திருப்பங்களை மிஞ்சியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில், நவம்பர் 12-ஆம் தேதி அன்று, மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது. சுமார் 15 கிலோ தங்க நகைகளும், 3 கிலோ வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்த கொள்ளை சம்பவமாக இது மாறியிருந்தது. இந்த வழக்கில், சந்தேகம்படும்படி கடைக்கு வந்தவர்கள் யார் என்பதை, போலீசார் தேட ஆரம்பித்தனர். அதில், நிஷாந்த் என்ற நபர் அடிக்கடி கடைக்கு வந்து, நகைகளையும், பாதுகாப்பு விவரங்களையும் நோட்டம் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் எங்கு இருக்கிறார், அவர் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், கொள்ளை சம்பவத்திற்கு பிறகு, நிஷாந்த் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருடன் செல்போனில் பேசியதாக கூறி, மீனாட்சி என்ற பிரபல YouTuber-ஐயும், நிஷாந்தின் தந்தை சுரேஷையும், போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 கிலோ அளவிலான தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் முயற்சியில் உள்ள போலீசார், நிஷாந்தையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

meenakshi
meenakshi Instagram

இதற்கிடையே, அந்த பெண் YouTuber யார், அவருக்கும் நிஷாந்துக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? என்ற பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளது. அதாவது, டெக் பாஸ் என்ற YouTube சேனலில் வீடியோ எடிட்டராக நிஷாந்த் பணியாற்றி வந்துள்ளார். அதே சேனலில், தொகுப்பாளராக மீனாட்சி பணியாற்றி வந்துள்ளார். ஒரே இடத்தில் பணியாற்றியபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பணியில் இருந்து விலகி சொந்தமாக சேனல் ஆரம்பித்த மீனாட்சி, அழகு குறிப்புகள், தனிப்பட்ட Vlog கண்டென்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.

YouTube-ல் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்களையும், இன்ஸ்டாகிராமில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்களையும் மீனாட்சி வைத்துள்ளார். கொள்ளை நடந்த பிறகு தலைமறைவாகிவிட்ட நிஷாந்த், சாலையில் சென்ற நபர் ஒருவரின் செல்போன் மூலமாக, மீனாட்சியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை செல்போன் சிக்னல்கள் மூலமாக கண்டுபிடித்த போலீசார், மீனாட்சியை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 5 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று வரை பிரபலமான YouTuber-ஆக இருந்த பெண் ஒருவர், மிகப்பெரிய கொள்ளை வழக்கில் கைதாகி இருப்பது, சினிமாவில் வரும் திருப்பங்களையே மிஞ்சியிருப்பதாக, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைது
மதுரை நகைக்கடை கொள்ளை.. இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி கைது! ஒருவர் தலைமறைவு!