கமுதி - “ஹோட்டலை எரிச்சிடுவேன்” - பரோட்டா கொடுக்காததால் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது!

கமுதியில் பரோட்டா கொடுக்காததால் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஹோட்டல்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஹோட்டல்PT WEB

செய்தியாளர் - அ. ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அல் புகாரி எனும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் அம்மன் பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் [20] என்ற இளைஞர் பரோட்டா சாப்பிட வந்துள்ளார். ஹோட்டலில் அனைத்து உணவுகளும் காலியானதால் கடையின் உரிமையாளர் ஷேக் அப்துல்லா சாப்பிட எதுவும் இல்லை என இளைஞரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞர் "பரோட்டா கொடுக்கவில்லை என்றால் கடையை எரித்து விடுவேன்" என மிரட்டி உள்ளார்.

காயமடைந்த பரோட்டா  மாஸ்டர்
காயமடைந்த பரோட்டா மாஸ்டர்

இச்சம்பவம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர், கமுதி காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் அளித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். புகாரின் பேரில் போலீசார் முத்துக்குமாரைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கமுதி போலீசார், தன்னைத் தேடுவதை அறிந்த முத்துக்குமார் நேற்று இரவு பிளாஸ்டிக் பையில் பெட்ரோல் வாங்கி அதில் தீ வைத்து அல் புகாரி கடையின் மீது வீசி சென்றுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஹோட்டல்
தெலங்கானா: அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த விபத்தில் பரோட்டா மாஸ்டர் வேலு என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முத்துக்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோட்டல்
ஹோட்டல்

இச்சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது, "கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர், 25ஆம் தேதிதான் சிசிடிவி காட்சிகளுடன் புகார் கொடுத்தார். 26 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தேடி 4 நபர்களைக் கைது செய்தோம். 27ஆம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஹோட்டல்
“ஜனாதிபதியை ஒருமையில் பேசிய சித்தராமையாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” - குமாரசாமி

பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக போலீசாரடம் புகார் கொடுக்கு வேண்டும் அல்லது கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக காவல்துறை சம்பவ இடத்திற்கே வந்து நடவடிக்கை எடுப்பார்கள். பொதுமக்களும், வர்த்தகர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com