தெலங்கானா: அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

தெலங்கானாவில் அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Car Accident
Car Accidentpt desk

தெலங்கானா மாநிலம் நல்லகொண்டா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், விஜயவாடாவில் உள்ள கனக துர்கையம்மன் கோயிலுக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மிரியாலகுடா என்ற பகுதியில் வேகமாக சென்ற கார் மீது பின்னால் வந்த லாரி அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Hospital
Hospitalpt desk

இன்னும் ஐந்தே நிமிடத்தில் வீடு வந்து சேர இருந்த நிலையில், பின்னால் வந்த லாரி மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com