தவெக பவுன்சரல் தூக்கிவீசப்பட்டதாக கூறப்படும் அஜய்
தவெக பவுன்சரல் தூக்கிவீசப்பட்டதாக கூறப்படும் அஜய்pt

’அந்த பவுன்சர் சாரி கேட்டாரு..’ பணத்துக்காக போலி புகார் கொடுக்குறாங்க! உடைத்து பேசிய இளைஞர்!

தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்டவன் நான்தான், தள்ளிவிடும் ஆதாரம் உள்ளதெனகூறி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் புகார் அளித்திருக்கும் நிலையில், உண்மையில் பாதிக்கப்பட்டவன் நான்தான் என விழுப்புரம் இளைஞர் கூறியுள்ளார்.
Published on
Summary

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்டதாக சரத்குமார் புகார் அளித்த நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த அஜய் உண்மையில் தானே தூக்கி வீசப்பட்டதாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், விஜயின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும், உண்மையை வெளிக்கொணர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் கடந்த ஆகஸ்டு 21-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. விஜய் மீதான பேரன்பில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க கிட்டத்தட்ட 80% இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்று மிரட்சியை ஏற்படுத்தினர். தவெக கட்சிசார்பில் மதுரை மாநாடு ஒரு வெற்றி மாநாடாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக மதுரை மாநாடு விஜய்
தவெக மதுரை மாநாடு விஜய்

ஒருபக்கம் தவெகவினருக்கும், விஜய்க்கும் இதுவொரு வெற்றிகரமான மாநாடாக இருந்தாலும், மறுபக்கம் தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விவகாரம் பூதாகரமாக உருவாகிவருகிறது.

தவெக பவுன்சரல் தூக்கிவீசப்பட்டதாக கூறப்படும் அஜய்
தவெக மாநாடு| ’பவுன்சரால் தூக்கி வீசப்பட்டது நானில்லை..’ மாறிமாறி பேசும் தாய் Vs மகன்! உண்மை என்ன?

தவெக மீது இளைஞர் புகார்..

மதுரை தவெக மாநாட்டில் விஜய் ரேம்வாக்கில் நடந்துவந்தபோது தடுப்புகளை மீறி அவரை காணச் சென்ற தொண்டர் ஒருவரை விஜயின் பவுன்சர் ஒருவர் மேடையிலிருந்து தூக்கி கீழே வீசினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர்
பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர்

இந்த நிலையில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட தனது மகனுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கோரி விஜய் மீதும், பாதுகாவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரத்குமார் என்ற இளைஞரும், அவருடைய தாயாரும் புகார் அளித்தனர். அந்த புகார் மதுரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் விவகாரம்
தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் விவகாரம்PT

முதலில் தூக்கிவீசப்பட்டது தான் இல்லை என்று சரத்குமார் என்ற இளைஞர் கூறிய நிலையில், தற்போது உடலில் காயங்கள் இருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் புகாரளித்துள்ளார். இப்படி சரத்குமார் என்ற இளைஞர் முன்னுக்குபின் முரணாக கூறிவரும் நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த அஜய் என்ற இளைஞர், பவுன்சரால் தூக்கிவீசப்பட்டது நான்தான் என்றும், பெரம்பலூரில் பணத்திற்காக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தவெக பவுன்சரல் தூக்கிவீசப்பட்டதாக கூறப்படும் அஜய்
"தூக்கிவீசப்பட்டது நான்தான்; கட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாதுனு..” - பவுன்சர்கள் மீது இளைஞர் புகார்

அந்த பவுன்சர் மன்னிப்பு கேட்டார்..

பவுன்சர்கள் விவகாரத்தில் பெரம்பலூரில் சரத்குமார் என்ற இளைஞர் தவெக மீது புகாரளித்திருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட சரவணப்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞரும், அவரது தாயார் நதியாவும் உண்மையில் பவுன்சரால் தூக்கிவீசப்பட்டது தனது மகன் என்றும், விஜயின் பெயருக்கு கலங்கும் விளைவிக்க பணத்தைப் பெற்றுக் கொண்டு பெரம்பலூர் பகுதியில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் அஜய்
விழுப்புரம் அஜய்

இந்த நிலையில் ரேம்ப்வாக்கில் ஏறிச்சென்று விஜயை சந்திக்க முற்பட்டபோது பவுன்சரால் தூக்கிவீசப்பட்டது நான் தான் என்று பேசியிருக்கும் அஜய், விஜய் ராம்வாக்கில் நடந்துவரும்போது மேலே ஏறி ஓடியது நான் தான், என்னைத்தான் பவுன்சர்கள் கீழே புடிச்சி தள்ளினாங்க, நான் கம்பிய புடிச்சிகிட்டதால எனக்கும் எதும் ஆகல. நான் நல்லா தான் இருக்கேன், இந்த சம்பவம் சார்ந்து பொய் புகார் கொடுத்திருக்காங்க, யாரும் அதை நம்பாதீங்க” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெரம்பலூரில் புகாரளித்த நபரிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் என்னிடம் மாநாட்டிற்கு செல்ல புறப்பட்டது முதல், மதுரை மாநாட்டிற்கு சென்றது, அங்கு ரேம்ப்வாக் பக்கத்தில் வீடியோ எடுத்தது என அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஆதாரம் இல்லாமல் பொய்யாக தளபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜய் கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அஜய், ” என்னை பவுன்சர் தூக்கி கீழே வீசியபோது விஜய் அண்ணா பார்த்து அதிர்ச்சியடைந்து பின்னால் வாங்க, இப்படியெல்லாம் பண்ணகூடாதுனு தூக்கிவீசுன பவுன்சர பின்னாடி வர சொல்லிட்டாரு. அந்த பக்கமா இருந்த மற்றொரு பவுன்சர் தூக்கிவீசுனதுக்காக என்கிட்ட சாரி சொன்னார். எனக்கு எந்த அடியும் படல நான் நல்லா தான் இருக்கேன்” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com