தவெக மாநாடு| ’பவுன்சரால் தூக்கி வீசப்பட்டது நானில்லை..’ மாறிமாறி பேசும் தாய் Vs மகன்! உண்மை என்ன?
மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் நடைமேடையில் நடந்துவந்தபோது அத்துமீறி மேலே ஏறிய இளைஞர் ஒருவரை பவுன்சர்கள் தூக்கி கீழே எறிந்தனர்.
அந்த நிகழ்வு விமர்சனங்களை பெற்ற நிலையில், அது தன்னுடைய மகன் தான் என்று பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி மேலும் விமர்சனம் பெற்றது.
இந்தசூழலில் அது தன்னுடைய அம்மா இல்லை என, பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக இளைஞர் ஒருவர் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர் - அச்சுதராஜகோபால்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்குட்பட்ட பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெரு அருகில் வசித்து வருபவர் சரத். அவர் நடிகரும் தவெக தலைவருமான விஜயின் ரசிகராக உள்ளார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மாநாட்டில் ரேம்வாக் மேடையில் விஜயை நெருங்க முயன்றவர்களை அப்புறப்படுத்தியும் விலக்கும் பணி கொண்ட பவுன்சரால் இளைஞர் ஒருவர் தூக்கி விசப்பட்ட சம்பத்தின் காட்சி இணையங்களில் வெளியாகி பேசுபொருளானது.
தன் மகன்தான் என வீடியோ வெளியிட்ட பெண்..
இந்நிலையில் பவுன்சரால் தூக்கிவீச்சப்பட்ட அந்த இளைஞர் சரத் எனவும் அவன் தனது மகன்தான் என அவரது தாயார் சந்தோசம் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததுடன் அதில் பல விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த சூழலில் தற்போது அந்த வீடியோவில் இருப்பது சரத் அல்ல, அது நான் தான் என விழுப்புரத்தை சேர்ந்த அஜய் என்ற இளைஞர் பகிர்ந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த குழப்பான சூழலில் உண்மையில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவர் யார் என்ற சர்ச்சை தற்போது வரையில் தொடரும் நிலையில், சரத்தின் தாயார் மகன் சொல்லவில்லை என்றாலும் தனக்கு தெரியும் எனவும், அதே ஆடைகளை பைகளில் எடுத்துகொண்டு புகார் அளிக்க போவதாகவும் இந்த பிரட்சனையால் மகனுக்கும் தனக்கும் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு என் பேச்சையே மகன் கேட்கவில்லையென கூக்குறலுடன் தாயார் அழுதுபுலம்புகிறார்.
இதுஒரு பக்கம் இருக்க இது தொடர்பாக தவெக நிர்வாகி ஒருவருடன் சரத் தனது தாயாரை வலுகட்டாயமாக வீடியோ எடுத்துள்ளதாகவும், அது தான் இல்லையென மறுப்பு வீடியோ ஒன்றை வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தூக்கி வீசப்பட்ட இளைஞர் நான் இல்லை..
இதுதொடர்பாக அது உண்மையா அல்லது கட்டாயபடுத்தினார்களா? உங்கள் தாயார் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளாரே என சரத்தை வீட்டில் நேரில் சந்தித்து கேட்டபோது, பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட நபர் தான் இல்லையெனவும் இதுகுறித்து பேசவிரும்ப வில்லையெனவும், தாயாரின் புகார் நடவடிக்கை கட்டாயப்படுத்தி கொடுக்கப்படுவதாக கோவத்துடன் பேசிய சரத் இனி இதுகுறித்து பேச விரும்பவில்லை என கிளம்புமாறு தெரிவித்தார்.
இந்நிலையில் சரத்தான் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டார் என அவரது ஆடை மற்றும் செல்போனை கையில் எடுத்துக்கொண்டு புகார் அளிக்க கிளம்பியுள்ள தாய் ஒருபக்கம், அதுதான் இல்லையென மறுக்கும் மகன் ஒருபக்கம். கட்சி அவபெயர் உண்டாக்க சில கட்சியினரின் முயற்சிகள் இவையென இதுகுறித்து தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் வலிகாட்டுதலின்படி இதை கையாள உள்ளதாக பெரம்பலூர் தவெக மாவட்ட செயலாளர் சிவக்குமார் மறுபக்கமும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தூக்கி எறியப்பட்டது சரத் இல்லை என்றாலும் பவுன்சர்களின் செயல் கண்டிக்கதக்கதே எனவும், நடைமேடையில் விஜயை நெருங்க அநாகரீக செயல் ஈடுபடுவதும் தவறுதான் எனவும் கமெண்டுகளில் முட்டி மோதும் இணையவாசிகள், தற்போது உண்மையிலேயே சரத் தாயார் கூறுவது உண்மையா இல்லை சரத் மறுத்துள்ளது உண்மையா என்ற பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு இடையில் புதியதலைமுறை சம்மந்தப்பட்ட சரத்தை நேரில் சென்று கேட்டதற்கு அது தான் இலையென மறுத்தும் தாயாரின் புகார் நடவடிக்கை கட்டாயப்படுத்தி நிகழ்வதாகவும் தெரிவித்து முற்றுபுள்ளி வைத்துள்ளார்.