மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடனமாடிய இளைஞர்கள்புதிய தலைமுறை
தமிழ்நாடு
“இதுபோன்ற காணொளிகளை இனி பதிவிட மாட்டோம்” - மன்னிப்பு கோரிய இளைஞர்கள்!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடனமாடுவது போல் காணொளி வெளியிட்ட 2 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை புகார் அளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடனமாடுவது போல் காணொளி வெளியிட்ட 2 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை புகார் அளித்துள்ளது. இதுகுறித்த புகாரில், “விக்னேஷ் பாலன் மற்றும் தேஜஸ் ஹரிதாஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களை முடக்க வேண்டும். அந்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சைபர் கிரைம் காவல் பிரிவுக்கு அறநிலையத்துறை கூறியுள்ளது.
இதனிடையே, கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடனமாடி பதிவிட்ட காணொளியை நீக்கிய விக்னேஷ் பாலன் மற்றம் தேஜஸ் ஹரிதாஸ், இதுபோன்ற காணொளிகளை இனி பதிவிட மாட்டோம் என மன்னிப்பு கோரினர்.
எப்பொழுதும் பரபரப்பாகஇருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை! கண்ணீரை வரவழைக்கும் வீடியோ