எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்?

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பதூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி உட்பட்ட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மஞ்சள் அலர்ட்
மஞ்சள் அலர்ட்கோப்புப் படம்

வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று மாலை வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை:

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கெல்லாம் மஞ்சள் நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

மிதமான மழை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உட்பட 29 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்
புயல், காற்றழுத்தம் இல்லை; ஆனாலும் மழை... காரணம் என்ன? விளக்கும் வெதர்மேன் பிரதீப்ஜான்

மழை தொடரும்: மேலும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை நேற்று மாலை முதல் தற்போது வரை பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. இருப்பினும் தற்போதுவரை சென்னையில் உள்ள எந்த பள்ளி, கல்லூரிகளுக்கு எந்த விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த 4 ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழை என்பது டிசம்பர் மாதங்களில் முடிவடைந்தாலும் ஜனவரி வரை மழை நீடித்துவருகிறது. அந்தவகையில் வடகிழக்கு பருவமழையின் இறுதி மழையாக இந்த 2 நாட்கள் பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com