புயல், காற்றழுத்தம் இல்லை; ஆனாலும் மழை... காரணம் என்ன? விளக்கும் வெதர்மேன் பிரதீப்ஜான்

எந்த இடங்களில் மழை மேகங்களில் மோதி, மழைப்பொழிவு இருக்கும் என்பதை கணிப்பது கடினமான விஷயம். இதுவே புயலென்றால் மேகங்கள் எப்பகுதியில் கரையைக் கடக்கும், எவ்வளவு மழைப்பொழிவு இருக்கும் என்பதை சொல்லமுடியும் - வெதர்மேன் பிரதீப்ஜான்
பிரதீப் ஜான்
பிரதீப் ஜான்pt web

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. நேற்றிரவு 8.30 மணி நிலவரப்படி சென்னை எண்ணூரில் 86.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாகையில் 90 மில்லி மீட்டரும், காரைக்காலில் 22 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ஜான்
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

அதில் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்ட சூழலில் கனமழையே பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், அதில் “சென்னையில் மிக கனமழை பெய்யவில்லை. அதேநேரம் அடர்த்தியான மழை மேகக்கூட்டங்கள் சென்னைக்கு தெற்கிலிருந்து மகாபலிபுரம் வரை உள்ளது. ஆகவே ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டாவில் இருந்து சென்னை வரை ஏற்கெனவே மிக கனமழை பெய்துள்ளது. திருவாரூர், சீர்காழி போன்ற இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது.

அதேபோல் விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை பகுதிகளிலும் கனமழை தொடரும். சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தற்போது ஓரிரு இடங்களில் கனமழைக்கே வாய்ப்புள்ளது. இது சமாளிக்கக்கூடிய வகையில் இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

மேலும் மழை கணிப்பு குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக அளித்த தகவலில், “நாம் எதிர்பார்த்திருந்த மழை மேகங்கள் டெல்டாவில் இருந்து கொஞ்சம் மேல் நோக்கி நகர்ந்து விழுப்புரம், மகாபலிபுரம், மரக்காணம் வரை இருப்பதை பார்க்கின்றோம். திருவாரூரில் 200 மிமீ மழையும், சீர்காழியில் 22 செமீ மழையும் பதிவாகியுள்ளது. தென் சென்னை பகுதிகளில் 50 முதல் 70 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது. தென் பகுதிகளில் மழை மேகங்கள் இப்போதும் வந்துகொண்டிருக்கிறது. தென்சென்னை பகுதிகளில் பரவலாக மழை பொழிவு இருக்கின்றது. ஆனாலும் அது சமாளிக்ககூடியதாகவே இருக்கும்.

நேரம் செல்ல செல்ல மழையின் தாக்கம் குறைந்துகொண்டேதான் வரும். விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது

இது புயல்சின்னமோ, புயலோ, காற்றழுத்த பகுதியோ கிடையாது. கிழக்கில் இருந்து வரும் காற்றும் மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒன்றிணைகின்றன. இம்மாதிரியான சூழலில் மழையை கணிப்பது கடினம்.

மழை இருக்கிறது என்று தெரியும், ஆனால் எப்பகுதிகளில் கனமழை, மிககனமழை பெய்யும் என கணிப்பது கடினம்.

எந்த இடங்களில் மழை மேகங்கள் மோதி, மழைப்பொழிவு இருக்கும் என்பதை கணிப்பது கடினமான விஷயம். இதுவே புயலென்றால் மேகங்கள் எப்பகுதியில் கரையைக் கடக்கும், எவ்வளவு மழைப்பொழிவு இருக்கும் என்பதை சொல்லமுடியும்.

மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைpt web

2021 ஜனவரியில் வரலாறு காணாத மழை பெய்ததை பார்த்தோம். ஜனவரி மாதம் என்றால் தமிழகத்தில் 2 செமீ மழை என்பதை சராசரி மழையாக நாம் கண்டுள்ளோம். ஆனால் கடந்த 2, 3 நாட்களில் 6ல் இருந்து 8 செமீ மழை பெய்துள்ளதை பார்க்கின்றோம். கடந்த 3, 4 வருடங்களாகவே ஜனவரியில் மழை பெய்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு முன்புகூட சில வருடங்களுக்கு ஒருமுறை ஜனவரியில் மழை இருக்கும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com