புழல் சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி; துப்பாக்கி முனையில் கைது செய்த போலீசார் - நடந்தது என்ன?

சென்னை மத்திய புழல் சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
பெண் கைதி ஜெயந்தி
பெண் கைதி ஜெயந்திPT WEB

சென்னை புழல் மத்தியச் சிறையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச் சம்பவங்களில் கைதாகி விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் அவர்கள் உள்ளனர்.

கைதி ஜெயந்தி
கைதி ஜெயந்தி

இந்தநிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செம்மஞ்சேரி பகுதியில் குடியேறியுள்ளார். அங்கிருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த வழக்கில் கைதாகி புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்திருந்தது.

சிறைக்குள் கைதிகளுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் தூய்மைப் பணி, தோட்ட வேலை, சமையல் வேலை என்ற அடிப்படையில் ஜெயந்திக்கு, கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் வந்து சந்திக்கும் நேர்காணல் அறை பகுதிக்கு அருகே தூய்மைப் பணி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெண் கைதி ஜெயந்தி
தமிழகத்தில் அடுத்தடுத்த நாள்களில் இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 13-ஆம் தேதி மாலை சிறையில் வழக்கம்போலக் கைதிகளைக் கணக்கெடுக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டிருந்தபோது பெண் கைதி ஜெயந்தி காணாமல் போனது தெரியவந்ததுள்ளது.

இது தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் காவல்துறையினர் சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி ஜெயந்தியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். சிறைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

சென்னை புழல் மத்தியச் சிறை
சென்னை புழல் மத்தியச் சிறை

இதனையடுத்து புழல் காவல்துறை மற்றும் சிறைத்துறையினர் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கைதியைத் தேடி வந்த நிலையில் கர்நாடகாவில் பெண் கைதியான ஜெயந்தி பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் ஜெயந்தியைத் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து அழைத்து வந்தனர்.

பெண் கைதி ஜெயந்தி
திருத்தணி: திறந்த முதல் நாளே பெயர்ந்து வந்த தரை... அரசுப் பள்ளியின் அவல நிலை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com